MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • CM Vijay: எதிர்பாராத ட்விஸ்ட்! டிரைவருக்காக கார் ஓட்டிய முதல்வர் விஜய்! வைரலாகும் போட்டோ!

CM Vijay: எதிர்பாராத ட்விஸ்ட்! டிரைவருக்காக கார் ஓட்டிய முதல்வர் விஜய்! வைரலாகும் போட்டோ!

Health Dept: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்காக 2.90 கோடி ரூபாய் மதிப்பிலான 40 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார். 

2 Min read
Author : vinoth kumar
Published : May 20 2026, 01:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 புதிய வாகனங்கள்
Image Credit : Asianet News

2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 புதிய வாகனங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககம்
Image Credit : Asianet News

மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககம்

மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககம், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலுள்ள ஸ்கேன் மையங்களில் கருவுறுதலுக்கு முன், கருவுறுதலுக்கு பின் பாலின தேர்வு தடைச்சட்டம் 1994-ன்படியும் மற்றும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997-ன்படியும் சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், முறையாக பதிவு பெறப்பட்டு இயக்கப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொள்ள புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
முதல்வர் விஜய் உத்தரவு போட்டும்! இன்னும் மூடப்படாத டாஸ்மாக் கடைகள்! இதுவரை மூடப்பட்ட மதுக்கடைகள் எத்தனை?
Related image2
மே 21ம் தேதி நாளை.. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
34
 மருத்துவப் பாதுகாப்புப் பணிகள்
Image Credit : Asianet News

மருத்துவப் பாதுகாப்புப் பணிகள்

மேலும் பேரிடர் மற்றும் பெருந்தொற்றுக் காலங்களில் மக்களுக்குத் தேவையான மருத்துவப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு தேவையான உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், போலி மருத்துவர் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் இப்புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் மரு. தாரேஸ் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

44
காரின் தரத்தையும் ஆய்வு செய்த முதல்வர்
Image Credit : Asianet News

காரின் தரத்தையும் ஆய்வு செய்த முதல்வர்

40 புதிய வாகனங்களில் ஓட்டுநர்களுக்கு கார் சாவியை முதல்வர் விஜய் வழங்கிய போது கடைசியாக கார் சாவியைப் பெற்றுக் கொண்ட ஓட்டுநர் முதல்வர் விஜயிடம், நீங்கள் வாருங்கள். உங்களை ஒரு ரவுண்ட் கூட்டிச்செல்ல விரும்புகிறேன் என தெரிவித்தார். அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காத முதல்வர் விஜய் கார் சாவியைப் பெற்றுக் கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு அந்த காருக்கென நியமிக்கப்பட்ட ஓட்டுநரை முன்பக்க இருக்கையில் அமர வைத்து தலைமைச் செயலகத்தில் ஒரு ரவுண்ட் வந்தார். மேலும் புதிதாக வாங்கப்பட்ட காரின் தரத்தையும் ஆய்வு செய்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு அரசு
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
DMK : திரிஷா பற்றி அசிங்கமான பேச்சு... சட்டென வந்த கோபம் - திமுக நிர்வாகியை லெஃப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..!
Recommended image2
Now Playing
மாவீரன் அயோத்திதாச பண்டிதருக்கு முதல்வர் விஜய் மலரஞ்சலி!
Recommended image3
Now Playing
CM Vijay | மருத்துவ சேவை வாகனத்தை ஒட்டி சோதித்துப் பார்க்கும் முதல்வர் விஜய் ! வைரலாகும் வீடியோ
Related Stories
Recommended image1
முதல்வர் விஜய் உத்தரவு போட்டும்! இன்னும் மூடப்படாத டாஸ்மாக் கடைகள்! இதுவரை மூடப்பட்ட மதுக்கடைகள் எத்தனை?
Recommended image2
மே 21ம் தேதி நாளை.. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved