கொளுத்தும் வெயில்! சென்னைக்கு போதிய குடிநீர் இருப்பு உள்ளதா? ஏரிகளின் நிலை என்ன?
வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில், சென்னைக்கு போதிய குடிநீர் இருப்பு உள்ளதா? ஏரிகளின் நிலை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

Chennai lakes Water supply status: தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைபிரதேசங்களை தவிர மற்ற தலைநகர் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, நாகர்கோவில் அனைத்து இடங்களிலும் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வருகிறது. மழை இல்லாததாலும், வெயில் கொளுத்துவதாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், வீராணம் உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
Chembarambakkam Lake
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலை என்ன?
இதனால் கோடையில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை வருமா? என அச்சம் எழுந்த நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய அளவு நீர் இருப்பதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. ஏரிகளில் போதுமான நீர் சேமிப்பு இருப்பதால், இந்த கோடையில் சென்னை மக்கள் தண்ணீர் பற்றாக்குறை குறித்து கவலைப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 8.5 ஆயிரம் மில்லியன் கன (TMC) நீர் சேமிப்பு உள்ளது என்றும் சென்னைக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு TMC தண்ணீர் தேவை என்றும் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Veeranam Lake
நீர் இருப்பு போதும்
மேலும், CMWSSB நெம்மேலி உப்புநீக்கும் ஆலை மூலம் 250 மில்லியன் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வருகிறது, இது தவிர 20 நாட்களில் சென்னை நகரம் கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீரைப் பெறும் என்றும் அதிகாரி கூறினார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்கு எல்லாம் இந்த குடிநீர் போதும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். தற்போது கிடைக்கும் மேற்பரப்பு நீர், இந்த கோடையை எதிர்த்துப் போராடவும், இன்னும் சில மாதங்களுக்கு நிர்வகிக்கவும் நகரத்திற்கு போதுமானது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
chennai water Situvation
பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம்
CMWSSB வலைத்தளத்தின்படி, பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து முக்கிய ஏரிகளும் கிட்டத்தட்ட 50% நிரம்பியுள்ளன. மொத்த நீர் கொள்ளளவு 13 டிஎம்சிக்கு எதிராக இப்போது 8.5 டிஎம்சியாக உள்ளது என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.
ஏப்ரல் மாத இறுதியில், பூண்டி ஏரியில் 2.03 டிஎம்சி தண்ணீர் உள்ளது, சோழவரம் ஏரி 1.4 டிஎம்சி தண்ணீரைக் கொண்டுள்ளது. ரெடில்ஸ் ஏரி 2.8 டிஎம்சி மற்றும் செம்பரம்பாக்கம் 2.5 டிஎம்சி தண்ணீரைக் கொண்டுள்ளது. வீராணம் ஏரியில் 0.741 டிஎம்சி தண்ணீர் உள்ளது, மேலும் நகரத்துக்கு குடிநீர் வழங்கும் ஒருங்கிணைந்த நீர் சேமிப்பு தற்போது சுமார் 66.61% ஆகும்.