- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் நடந்து சென்ற கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்! சினிமா மிஞ்சிய சம்பவம்! வாலிபர் சிக்கியது எப்படி?
சென்னையில் நடந்து சென்ற கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்! சினிமா மிஞ்சிய சம்பவம்! வாலிபர் சிக்கியது எப்படி?
சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

sexual harassment
Chennai Shocking News: சென்னையில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் அத்துமீறிய வாலிபர் ஒருவர் போலீசாரிடம் சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
chennai police
பாலியல் தொந்தரவு
சென்னை நொளம்பூர் பகுதியில் கடந்த 25ம் தேதி இரவு கல்லூரி மாணவி வீட்டிற்கு செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் திடீரென்று மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார். பொதுமக்கள் வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
chennai
வாலிபர் கைது
இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரின் அடையாளம் தெரிந்தது. இதனையடுத்து அந்த வாலிபர் அம்பத்தூர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் ஜிபே மூலம் பணம் செலுத்தியதை கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நீலாங்கரையை சேர்ந்த சரத்பாபு (31) என்ற தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜெண்ட் என்பது தெரியவந்தது. இன்னும் திருமணம் ஆகவில்லை.
arrest
புழல் சிறையில் அடைப்பு
பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான சரத்பாபு, எழும்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் ஏற்கனவே கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக செல்போனில் தன்னை மறந்து பேசிக்கொண்டு நடந்து செல்லும் பல இளம்பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றுவிடுவதும் தெரியவந்துள்ளது.