- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் 2024ம் ஆண்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!
தமிழகத்தில் 2024ம் ஆண்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2024ஆம் ஆண்டில் போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

Tamilnadu Crime
தமிழ்நாட்டில் சமீப காலமாக பள்ளி சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் கிடு கிடுவென அதிகரித்த வண்ணம் உள்ளது. கிருஷ்ணகிரி அரசு பள்ளி மாணவி மீதான பாலியல் சம்பவம், அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு, வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி மீதான தாக்குதல் அடுத்தடுத்து அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
Tamilnadu Crimes against women
பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
இந்நிலையில் தமிழகத்தில் ஒரே ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2023ல் 3,084ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள 2024ல் 3,243ஆக அதிகரித்துள்ளது. இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பாக மட்டும் 1,885 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2023ல் 406ஆக பதிவாகி இருந்த நிலையில் 2024ல் 471ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி! ராமாயணத்தை இழுத்த துரைமுருகன்! பேரவையில் நடந்தது என்ன?
children abuse
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை
அதேபோல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் கடந்த 2024ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. 2022ல் 4,968 போக்சோ வழக்குகளும், 2023ல் 4,581 போக்சோ வழக்குகளும் பதிவாகியிருந்தன. இது கடந்த 2024ம் ஆண்டில் 6,929ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: இனி பெண்களுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு! சென்னை காவல்துறை சூப்பர் திட்டம்!
Number of murders
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை
அதேபோல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் கடந்த 2024ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. 2022ல் 4,968 போக்சோ வழக்குகளும், 2023ல் 4,581 போக்சோ வழக்குகளும் பதிவாகியிருந்தன. இது கடந்த 2024ம் ஆண்டில் 6,929ஆக உயர்ந்துள்ளது.