சென்னையில் சமையல் வேலை செய்யும் பெண், அக்கா வீட்டிலிருந்து திரும்புகையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளானார்.
சென்னை, கீழ்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அவரது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது பராக்கா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது இல்லாமல் எல்லை மீறியுள்ளார்.
இதையும் படிங்க: எங்க கிட்டயே உங்க வேலைய காட்டுறியா! டிடிஎஃப் வாசனுக்கு ஆப்பு வைத்த ஆந்திரா போலீஸ்!
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அலறி கூச்சலிடவே அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சினிமாவை மிஞ்சும் பயங்கரம்! பாஜக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை!
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது எதிரி கீழ்ப்பாக்கம் சிவகாமிபுரம் சந்தானம் மகன் பிரேம் (19) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் எதிரி பிரேம் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி பிரேம் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் 1 லட்சம் கோடி ஊழல்! அமலாக்கத்துறை சோதனைக்கு இவர் தான் காரணமா?
