- Home
- Tamil Nadu News
- எங்க கிட்டயே உங்க வேலைய காட்டுறியா! டிடிஎஃப் வாசனுக்கு ஆப்பு வைத்த ஆந்திரா போலீஸ்!
எங்க கிட்டயே உங்க வேலைய காட்டுறியா! டிடிஎஃப் வாசனுக்கு ஆப்பு வைத்த ஆந்திரா போலீஸ்!
யூடியூபர் டிடிஎஃப் வாசன் திருப்பதியில் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதால் ஆந்திரா போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது, அந்த வழக்கில் டிடிஎஃப் வாசனின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளனர்.

YouTuber TTF vasan
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். பைக் ரேஸரான இவருக்கு என்று ரசிகர் பட்டாளே உள்ளது.
பல இடங்களுக்கும் பைக்கில் சென்ற டிடிஎஃப் வாசனுக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் மற்றும் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. சமீபத்தில் இவரது லைசென்ஸ் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.
TTF Vasan
கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனத்திற்காக சென்றிருந்தார். அப்போது யூடியூபர் டிடிஎஃப் வாசன் அவருடைய ஒளிப்பதிவாளர் அசீஸ் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த அறையை திறப்பது போன்ற வீடியோ இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுள்ளார். அதனை tirupati Funny video என்ற பெரியல் டிடிஎஃப் வாசன் பதிவிட்டதை வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
Tirupati Temple
இதையடுத்து டிடிஎஃப் வாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் கூறியிருந்தது. இது தொடர்பாக தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் டிடிஎஃப் வாசன் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனா்.
frozen yotuber ttf vasan bank accounts
இந்நிலையில் அந்த வழக்கில் 8 மாதங்களுக்கு பிறகு ஆந்திரா போலீசார் அததிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் குறும்பு வீடியோ பதிவிட்ட நிலையில் டிடிஎப் வாசனின் வங்கி கணக்குகளை ஆந்திரா போலீசார் முடக்கி உள்ளனா்.