- Home
- Tamil Nadu News
- Senthil Balaji: செந்தில் பாலாஜியை தலையில் இடியை இறக்கிய கோர்ட்.. சுத்துப்போட தயாராகும் போலீஸ்.. அதிர்ச்சியில் திமுக
Senthil Balaji: செந்தில் பாலாஜியை தலையில் இடியை இறக்கிய கோர்ட்.. சுத்துப்போட தயாராகும் போலீஸ்.. அதிர்ச்சியில் திமுக
Chennai High Court: தவெக ஆட்சி கவிழ்ப்பு தொடர்பான குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், தங்களை வேறு வழக்கில் கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது என தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில் அந்த ஆட்சியை கவிழ்க்க தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாகினர். இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகும் போது விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது, வேறொரு வழக்கில் கைது செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், அந்த மனுவில், தங்களுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் நிபந்தனையை கண்டிப்புடன் பின்பற்ற தயாராக இருப்பதாகக் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டியுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளதாகவும், அதன்படி, ஏதேனும் ஒரு வழக்கில் தங்களை கைது செய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குதிரை பேர வழக்கில் தங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கிய பின்னும், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சரணடைந்து முன் ஜாமீன் பெறவில்லை. இந்த சூழ்நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என கோர முடியாது. மற்ற வழக்குகளை பொருத்தவரை, முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

