- Home
- Tamil Nadu News
- 61 வயது மூதாட்டியிடம் 30 வயது தவெக நிர்வாகி! வசமாக சிக்கியவரை தட்டித்தூக்கிய போலீஸ்!
61 வயது மூதாட்டியிடம் 30 வயது தவெக நிர்வாகி! வசமாக சிக்கியவரை தட்டித்தூக்கிய போலீஸ்!
TVK Member Chain Snatching: சென்னையில் இருந்து ஊர் திரும்பிய மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து லிப்ட் கொடுத்த தவெக நிர்வாகி, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் 3 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றார்.

தவெக நிர்வாகி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள ஒண்டி குடிசை கிராமத்தை சேர்ந்தவர் மலர் (61). இவர் கணவரை இழந்த தனியாக வசித்து வரும் மலர் கிடைக்கும் வேலையை செய்து தனது பிழைப்பை நடத்தி வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனது மகனை பார்த்து விட்டு மீண்டும் தனது சொந்த கிராமத்திற்கு செல்ல காத்திருந்தார்.
செயின் பறிப்பு
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் மூதாட்டி மலர் உதவி கேட்டுள்ளார். மூதாட்டிக்கு லிப்ட் கொடுத்திருக்கிறார். பின்னர் போக வேண்டிய இடத்திற்கு முன்கூட்டியே வாகனத்தை நிறுத்திய இளைஞர் இதற்கு மேல் பைக் போகாது என்று கூறி மூதாட்டியை இறக்கி விட்டுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்தார்.
சிசிடிவி கேமராக்கள்
இதை சற்றும் எதிர்பார்க்காத மூதாட்டி அலறி கூச்சலிட்டுள்ளார். ஆனால் அது ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதி என்பதால் யாரும் வரவில்லை. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மூதாட்டி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
திருச்சி தவெக மாநாடு
அப்போது செயின் பறிப்பில் ஈடுபட்டது ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த கௌதம் (30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை ஆரணி தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 3 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கௌதம் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். எம்பிஏ பட்டதாரியான இவர் திருச்சியில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சிக்கு சென்றதால் கடன் சுமை ஏற்பட்டதால் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.