- Home
- Tamil Nadu News
- சென்னையில் அதிர்ச்சி! ஒரே மெசேஜ்! அலறியடித்து வெளியேறிய ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்கள்!
சென்னையில் அதிர்ச்சி! ஒரே மெசேஜ்! அலறியடித்து வெளியேறிய ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்கள்!
Chennai IT Companies: தமிழகத்தில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களின் வரிசையில், தற்போது சென்னை சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனங்களுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் வந்த வண்ணம் உள்ளன. அதாவது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும், தவெக தலைவர் விஜய்யின் வீடு, நடிகை த்ரிஷா வீடு, சென்னை ஐகோர்ட்டு, டிஜிபி அலுவலகம், விமான நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து மிரட்டல் விடுக்கிறார் என்பது தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இன்று காலை சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் மற்றும் துரைபாக்கத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் காலை 9 மணியிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை யாரும் வெளியே அனுப்பாமல் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்யும் இடத்தில் செம்மஞ்சேரி போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
அதேபோல் துரைப்பாக்கத்தில் உள்ள 10 மாடி கட்டிடமான சென்னை ஓன் வளாகம் நிறுவனத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை ஈடுபட்டுள்ளனர். ஐடி நிறுவனங்களுக்கு பணிக்கு வந்தத பணியாளர்களை வீட்டுக்கு திரும்பி செல்ல நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளனர்.