- Home
- Politics
- கிஷோர் k சாமி வீட்டுக்கும் வெடி குண்டு மிரட்டல்..! தேங்காயில பாம் மாதிரி ஒரு வாரமா ஒரே பாம் பேச்சு தான்..!
கிஷோர் k சாமி வீட்டுக்கும் வெடி குண்டு மிரட்டல்..! தேங்காயில பாம் மாதிரி ஒரு வாரமா ஒரே பாம் பேச்சு தான்..!
கடந்த ஒரு மாதத்தில் சென்னையில் சுமார் 30க்கும் மேற்பட்ட இது போன்ற மிரட்டல்கள் பதிவாகியுள்ளன. இந்த மிரட்டல்கள் பிரபலங்கள், அரசு அலுவலகங்கள், ஊடக நிறுவனங்கள், பொது இடங்களை இலக்காகக் கொண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் காவல்துறையினர், பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும்ம் இவை அனைத்தும் புரளி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் ஒவ்வொரு மிரட்டலுக்கும் காவல்துறையினர், வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு (BDDS) மோப்ப நாய்களுடன் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் சென்னையில் சுமார் 30க்கும் மேற்பட்ட இது போன்ற மிரட்டல்கள் பதிவாகியுள்ளன.
இந்த மிரட்டல்கள் பிரபலங்கள், அரசு அலுவலகங்கள், ஊடக நிறுவனங்கள், பொது இடங்களை இலக்காகக் கொண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் ரவி மாளிகை, பாஜக தலைமையகம், நடிகை த்ரிஷா வீடு, எஸ்.வி. சேகர் வீடு, டிஜிபி அலுவலகம், யூடியூபர்கள் வீடு, தொலைக்காட்சி அலுவலகம், விஜயின் நீலங்கரை வீடு என பல இடங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள 10 மாடி கட்டடமான சென்னை ஒன் வளாகம், சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதால் சோதனை நடத்தப்பட்டது. ஐடி நிறுவனங்களுக்கு பணிக்கு வந்த பணியாளர்களை வீட்டுக்கு திரும்பி செல்ல நிறுவனங்கள் அறிவுறுத்தின.
சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதியதலைமுறை அலுவலகத்திற்கு நேற்று நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கு ஊழியர்களை வெளியேற்றி நள்ளிரவு சோதனை நடந்தது. சோதனைக்குப்பிறகு மிரட்டல் வெறும் புரளி என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் அரசியல் விமர்சகரும், யூடியூபருமான கிஷோர் கே.சாமி வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர், ‘‘என் பெற்றோர் இருவருக்கும் 75 வயது. திடீரென அதிகாலையில் மூன்று போலீசார் என் வீட்டிற்கு வந்து வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக கூறிவிட்டு, அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். மூத்த குடிமக்களின் மனநிலையை கற்பனை செய்து பாருங்கள். இதைச் செய்வதன் நோக்கம் என்ன? நான் தினமும் கிட்டத்தட்ட 7 நேர்காணல்களை வழங்குகிறேன். அதாவது நான் சீக்கிரம் எழுந்து தயாராகப் புறப்பட வேண்டும். உண்மையைப் பேசுவதற்கும் பொருத்தமான கேள்விகளைக் கேட்பதற்கும் மட்டும் ஏன் இவ்வளவு அதிர்ச்சி?
யோவ் எனக்கேன்யா வெடிகுண்டு மிரட்டல் விடுக்கறீங்க? நான் அந்த அளவுக்கெல்லாம் வொர்த் இல்லைய்யா. ஊசி பட்டாசுக்கே டமாலாயிடுவேன்’’ என வேதனையையும், விரக்தியையும் வெளிப்படுத்தி உள்ளார்.