MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாஜக அழுத்தம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க! திமுகவிற்கு தேர்தல் பயம் வந்ததை இது காட்டுகிறது! தவெக அருண்ராஜ் !

பாஜக அழுத்தம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க! திமுகவிற்கு தேர்தல் பயம் வந்ததை இது காட்டுகிறது! தவெக அருண்ராஜ் !

TVK Vs BJP: பாஜக பல்வேறு அழுத்தங்களை கொடுக்க முயற்சி செய்தது. தற்பொழுது ஜனநாயகம் படம் நிறுத்தம், சிபிஐ விசாரணை என அழுத்தம் கொடுத்து வருகிறது பரபரப்பு குற்றச்சாட்டு.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 20 2026, 01:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இல்ல திருமண விழா
Image Credit : Asianet News

இல்ல திருமண விழா

மதுரையில் உள்ள விஜயின் தீவிர ஆதரவாளர் முனீஸ் பாண்டியர்களின் இல்ல திருமண விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதுரை மட்டுமல்லாது தமிழக முழுவதிலும் பெருகிவரும் ஆதரவால் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை முடிவு. இதனை முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார். கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எதிர்பார்த்து அதனை அறிவிக்கவில்லை. இதனை எந்த கட்சியும் சொல்லவில்லை சமூக நீதி அடிப்படையில் செயல்படும் தவெக சொல்லி இருக்கிறது.

24
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
Image Credit : Asianet News

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நேரத்தில் தோல்வி அடையும் கட்சியோடு தேமுதிக சேர்ந்து இருப்பதால் அவர்களும் தோல்வி அடைவார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தமிழக வெற்றி கழகத்திலிருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை என திருமாவளவன் கருத்தை மறுத்தார்.

Related Articles

Related image1
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கே.என்.நேருவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்.! அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!
Related image2
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்! இன்றுடன் கடைசி நாள்! அரசு தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு!
34
 திமுகவிற்கு தேர்தல் பயம்
Image Credit : Asianet News

திமுகவிற்கு தேர்தல் பயம்

கூட்டணி குறித்த முடிவுகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் எடுப்பார். தமிழ்நாடு 90 சதவீத மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள் இளைஞர்களை அரசியல் நோக்கி இழுத்தது தமிழக வெற்றிக் கழகம் தான். திமுக பிப்ரவரி 22ம் தேதி தான் தேர்தல் கூட்டணி குழு அமைப்பது தொடர்பாக தெரிவித்தது. ஆனால் காலை பிடித்து அவசரமாக தேமுதிக உள்ளே கொண்டு வந்ததன் காரணம் என்ன? தேர்தல் பயம் திமுகவிற்கு வந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது. ஆளும் திமுகவிற்கு கூட்டங்கள் நடத்த உடனடியாக அனுமதி கிடைக்கிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நூற்றுக்கணக்கான விதிமுறைகள், அனுமதி மறுப்பு என தடைகளை ஆளும் கட்சியினர் செய்கிறார்கள்.

44
அழுத்தம் கொடுக்கும் பாஜக
Image Credit : Asianet News

அழுத்தம் கொடுக்கும் பாஜக

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரி அரசியல் எதிரி என இரண்டு ஆளும் கட்சிகளை அறிவித்துவிட்டார். பாஜக பல்வேறு அழுத்தங்களை கொடுக்க முயற்சி செய்தது. தற்பொழுது ஜனநாயகம் படம் நிறுத்தம், சிபிஐ விசாரணை என அழுத்தம் கொடுத்து வருகிறது. மதவாத பாஜகவுடன் கூட்டணியில்லை என அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது விரைவில் அது அறிவிக்கப்படும் என்றார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
அரசியல்
டிவி.கே. விஜய்
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னை மக்களே! இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. இதோ முழு விவரம்
Recommended image2
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கே.என்.நேருவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்.! அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!
Recommended image3
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்! இன்றுடன் கடைசி நாள்! அரசு தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு!
Related Stories
Recommended image1
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கே.என்.நேருவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்.! அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!
Recommended image2
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்! இன்றுடன் கடைசி நாள்! அரசு தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved