MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN School Teacher: இனி ஆசிரியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! மீண்டும் வருகிறது!

TN School Teacher: இனி ஆசிரியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! மீண்டும் வருகிறது!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பயோமெட்ரிக் முறை பள்ளிகளில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 18 2024, 07:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி,  நடுநிலைப்பள்ளி,  உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால், பள்ளிக்கு மாணவர்கள் குறித்த நேரத்தில் வந்தாலும் ஒரு சில ஆசிரியர்கள் தாமதமாக பணிக்கு வருவதும் முன்கூட்டியே புறப்பட்டு செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இதுதொடர்பாக புகார்களும் வந்த வண்ணம் இருந்தன.

25

இந்நிலையில் ஆசிரியர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. 2020-ம் ஆண்டு மார்ச் இறுதியில், கொரோனா பரவல் காரணமாக  பயோமெட்ரி எந்திரம் மூலம் கொரோனா பரவும் என்பதால் பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.

இதையும் படிங்க: School Student: தப்பி தவறி கூட அசால்டா இருந்திடாதீங்க! மாணவர்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்!

35

இந்நிலையில் ஆசிரியர்களுக்கு மீண்டும் விரல் ரேகை (Bio Metric) அடிப்படையிலான வருகைப்பதிவு முறையினை நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதையும் படிங்க: Train Reservation: ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்! பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே துறை!

45

அதாவது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகையான  நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்  பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவேடு மேற்கொள்ளும் வகையில் அனைத்து விவரங்களையும் தயார் செய்து அம்மாவட்டத்தை சார்ந்த கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: School Education Department: அக்டோபர் 25-ம் தேதி வரை தான் கெடு! தேர்வுத் துறை அதிரடி!

55

மேலும் 3½ ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் எந்திரங்கள் எத்தனை? அதில் எத்தனை இயங்குகின்றன? எத்தனை இயங்கவில்லை? என்ற விவரத்தையும் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொரோனா வைரஸ்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 நாள் விடுமுறை.. மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி.. போக்குவரத்து துறை சொன்ன குட்நியூஸ்!
Recommended image2
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Recommended image3
தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை..! முதல்வர் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved