- Home
- Tamil Nadu News
- சென்னையில் சாலையோரங்களில் இலவச ஏசி ஓய்வறை.! நாளை முதல் ஊழியர்களுக்கு கொண்டாட்டம்
சென்னையில் சாலையோரங்களில் இலவச ஏசி ஓய்வறை.! நாளை முதல் ஊழியர்களுக்கு கொண்டாட்டம்
பல்வேறு நாடுகளில் வீட்டிற்கு உணவு டெலிவரி சேவை அதிகரித்துள்ளது. டெலிவரி ஊழியர்களின் நலன் கருதி, சென்னை மாநகராட்சி சார்பாக சாலையோரங்களில் ஏசி ஓய்வறைகளை அமைக்கப்பட்டுள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
வீடு தேடி வரும் உணவு பொருட்கள்
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகவே வீட்டிற்குள் இருந்தே உணவு பொருட்கள் முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கிட முடியும். இதன் காரணமாக பல லட்சம் இளைஞர்கள் மட்டுமல்ல பெண்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
மழை, வெயில் என எந்த காலமாக இருந்தாலும் அழைந்து திரிந்து உணவுகளை வாங்கி வந்து வீட்டில் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன.
டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்
இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களில் கூட டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒதுங்குவதற்கு கூட சரியான இடம் இல்லாத நிலை உள்ளது. அதிலும் இந்த டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். இந்த ஊழியர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.
சாலையோரங்களில் ஏசி ஓய்வறை
அவசர தேவைகளுக்காக ஒதுங்க கூட முடியாத நிலை நீடிக்கிறது. கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் சாலையோரங்களில் ஒதுங்கி நிற்கும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் முதல் முறையாக உணவு டெலிவிரி செய்யும் ஊழியர்களுக்காக ஏசி ஓய்வரை பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்தது.
தற்போது இந்த திட்டம் நாளை முதல் தொடங்கப்டவுள்ளது. சோதனை அடிப்படையில், அண்ணா நகர், கே.கே.நகரில் நாளை முதல் திறக்கப்படுகிறது.
ஏசி ஓய்வறை வசதிகள் என்ன.?
இதில் 600 சதுரடி பரப்பளவில் அமையவுள்ள இந்த ஓய்வறையில், 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கும், 25 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும், மேலும் 20 டூவிலர் வரை பார்க்கிங் செய்யும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி. நகர் போன்ற பகுதிகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.