பெங்களூருவில் கண்காட்சியில் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால், கணவனால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட பெண், கள்ளக்காதலனால் ஓட்டலில் 17 முறை குத்திக் கொல்லப்பட்டார்.
கள்ளக்காதல்
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் தாசே கவுடா. இவரது மனைவி ஹரிணி (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஹரிணி வசிக்கும் பகுதியில் கண்காட்சி நடைபெற்றது. அங்கு சென்ற போது டெக்னீஷியனாக இருந்த யஷாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். இதனையடுத்து இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
வீட்டிலேயே அடைத்து வைத்த கணவர்
தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவி கண்டித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தாசே கவுடா ஹரிணியின் செல்போனை பறித்து கொண்டு, வீட்டிலேயே அடைத்து வைத்தார்.
17 முறை கத்தியால் குத்திக்கொலை
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் வெளியே வந்த ஹரிணி கள்ளக்காதலன் யஷாஸை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர், கடந்த 6ம் தேதி பெங்களூரு பூர்ணா பிரக்யா லேஅவுட்டில் உள்ள ராயல்ஸ் ஓட்டலில் அறை முன்பதிவு செய்த யஷாஸ் அங்கு அவரை அழைத்து சென்றார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த யஷாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஹரிணியை சரமாரியாக 17 முறை குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
பின்னர், அங்கிருந்து யஷாஸ் தப்பிவிட்டார். அறையில் தங்கியவர்கள் கதவை தட்டியும் நீண்ட நேரமாக வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது ஹரிணி சடலமாக ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சடலத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.