- Home
- Tamil Nadu News
- சுய உதவி குழுவிற்கு இவ்வளவு கம்மி வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடனா.! தமிழக அரசு குஷியான அறிவிப்பு
சுய உதவி குழுவிற்கு இவ்வளவு கம்மி வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடனா.! தமிழக அரசு குஷியான அறிவிப்பு
தமிழக அரசு, சிறுபான்மையினர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறு வியாபாரம்/தொழில் தொடங்க கடன் வழங்குகிறது. குழுவில் 60% சிறுபான்மையினர் இருக்க வேண்டும். காய்கறி கடை, மீன் வியாபாரம் போன்றவற்றுக்கு கடன் பெறலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
சுய உதவிக்குழுவிற்கு சிறு கடன்
சுய உதவிக்குழுக்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சிறுபான்மையின பெண்கள் மற்றும் ஆண்கள் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, தனித்தனியே அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம் / சிறு தொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் வகையில்
யாருக்கெல்லாம் கடன் உதவி கிடைக்கும்
அவர்களது குழுக்களுக்கு காய்கனி கடை, மீன் வியாபாரம், பூ வியாபாரம், பலகாரக்கடை, தையல் கடை, கைத்தொழில்கள், சிறுவணிகம் போன்றவற்றை நடத்த கடன் பெற முடியும். மேலும் பயனாளி, சிறுபான்மை சுய உதவிக் குழுவில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும்.
குழுவில் குறைந்தது ஆறுமாதம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். 60% சிறுபான்மையினராக அவசியம் இருத்தல் வேண்டும். எஞ்சியுள்ள 40% பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர, ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் இதர வகுப்பினர் இடம் பெறலாம்.
குழுவில் அதிகபட்சமாக 20 அங்கத்தினர்களும், குறைந்தபட்சமாக 10 அங்கத்தினர்கள் இருத்தல் வேண்டும். சிறுபான்மையினர் குழுக்களில் பெண்கள் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அளிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
1. மதத்திற்கான சான்று: சாதிச் சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ் /சிறுபான்மையினர் மதம் குறித்து வழிப்பாட்டு ஸ்தலத்தால் அளிக்கப்பட்ட சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்.
2. வருமானச் சான்றிதழ் நகல்.
3. இருப்பிட சான்றிதழ் நகல்.
4. ஆதார் எண் நகல்.
5. இதர குழு உறுப்பினரின் இணைப்புகள்
விண்ணப்பிக்கும் முறை:
அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரகம் /மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் / நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி.
திட்டம்-1
அதிகபட்சக் கடன் தொகை (உறுப்பினர் ஒருவருக்கு)- 1,00,000/-
வட்டி விகிதம் - 7% (ஆண்டிற்கு)
தவணைத் தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய காலம்- அதிகபட்சம் 3 ஆண்டுகள்
குடும்ப ஆண்டு வருமானம் * நகர்ப்புறம் ⚫கிராமப்புறம் .3,00,000/- க்கு மிகாமல்
சிறு கடன் திட்டம்-2
அதிகபட்சக் கடன் தொகை (உறுப்பினர் ஒருவருக்கு)- 1,50,000/-
வட்டி விகிதம் ஆண் பயனாளிகளுக்கு- 10% (ஆண்டிற்கு)
வட்டி விகிதம் பெண் பயனாளிகளுக்கு- 8% (ஆண்டிற்கு)
தவணைத் தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய காலம்- அதிகபட்சம் 3 ஆண்டுகள்
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல்