Schools Holiday:குட்நியூஸ்! ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School Holiday
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா பழைய கோட்டையில் மேலப்பாளையம் சிற்றுாரில் பிறந்து ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை. அவரது நினைவு நாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
Government Offices
இந்த உள்ளூர் விடுமுறை நாளில் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக்கிழமை என்பதால் அதற்கு ஈடான பணி நாளாக வேறு நாளினை அறிவிக்க தேவை ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School, Colleges Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஆகஸ்ட் 3ம் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
Valvil Ori Festival
அதேபோல் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை ஒட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18 ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Colleges Holiday: ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!