- Home
- Tamil Nadu News
- ரவுடி பொன்னை பாலுக்கு ஜாமீன்.. காலில் விழுந்து கதறல்.. நடந்தது என்ன? ரிவென்ஞ் எடுக்க காத்திருக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்பு
ரவுடி பொன்னை பாலுக்கு ஜாமீன்.. காலில் விழுந்து கதறல்.. நடந்தது என்ன? ரிவென்ஞ் எடுக்க காத்திருக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவுடி பொன்னை பாலு தனது தாய் இறந்ததால் இறுதிச் சடங்கில் பங்கேற்க 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை
கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டினர். இதில் 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவர் மட்டும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் சம்போ செந்தில் உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
உடல்நலக்குறைவால் நாகேந்திரன் உயிரிழப்பு
சிறையில் இருந்த படியே ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
பொன்னை பாலு ஜாமீன் கேட்டு மனு
பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றம் மேல்முறையீடு செய்து சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கியது. இந்நிலையில், தாய் இறந்து விட்டதால் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தனக்கு இடைக்காலமாக ஜாமீன் வழங்கக் கோரி ரவுடி பொன்னை பாலு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
ரவுடி பொன்னை பாலுவுக்கு ஜாமீன்
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரே மகன் என்ற அடிப்படையில் உயிரிழந்த தாய்க்கு பொன்னை பாலு மட்டுமே இறுதி சடங்கு மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவருக்கு இடைக் காலமாக ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ஆம்ஸ்ட்ராங் தரப்பு
இதனையடுத்து வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த குறவன் குடிசை பகுதியை சேர்ந்த தாயார் மல்லிகா(75) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தனது தாயின் இறுதி சடங்கில் பங்கேற்று கண்ணீர் மல்க காலில் விழுந்து பொன்னை பாலு அஞ்சலி செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பொன்னை பாலு இடைகால ஜாமீனில் வெளியே வந்த நிலையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

