- Home
- Tamil Nadu News
- சூப்பர் சான்ஸ்.! மாதம் 8000 ரூபாய் உதவித்தொகை.! யாருக்கெல்லாம் தகுதி.? விண்ணப்பிப்பது எப்படி.?
சூப்பர் சான்ஸ்.! மாதம் 8000 ரூபாய் உதவித்தொகை.! யாருக்கெல்லாம் தகுதி.? விண்ணப்பிப்பது எப்படி.?
Tamil Scholars Scholarship Scheme : முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகையும், இலவச பேருந்து பயண சலுகையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் 2025-26ஆம் ஆண்டிலும் தொடரப்படுகிறது. தமிழுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆயுள் முழுவதும் பணியாற்றிய முதிர்ந்த தமிழறிஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு,
மாதந்தோறும் ரூ.7,500/- உதவித்தொகையும், ரூ.500/- மருத்துவச் செலவுத் தொகையும் வழங்கப்படும். மொத்தம் ரூ.8,000/- வழங்கப்படுவது சிறப்பு. மேலும், அரசு பேருந்துகளில் இலவசப் பயண சலுகையும் ஏற்பாடாகியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் முன்னர் 100 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், 2025-26ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக அரசு கூடுதலாக ரூ.48 இலட்சம் ஒதுக்கியுள்ளது. தமிழறிஞர் காலமான பின், அவரின் மனைவி அல்லது திருமணமாகாத மகள் அல்லது விதவை மகளுக்கு, மாதம் ரூ.2,500/- மற்றும் ரூ.500/- மருத்துவத் தொகை வழங்கப்படும்.
தகுதியுடையவர்கள் 01.01.2025 அன்று 58 வயதை கடந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும். தமிழ்ப்பணிகள் குறித்த விவரக் குறிப்பு மற்றும் இரண்டு தமிழறிஞர்களின் பரிந்துரை கடிதம் கட்டாயம். ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் மாவட்ட மற்றும் மண்டல தமிழ் வளர்ச்சி அலுவலகங்களிலும், www.tamilvalarchithurai.tn.gov.in இணையதளத்திலும் கிடைக்கின்றன. 2025 நவம்பர் 17க்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இத்திட்டம், தமிழறிஞர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் துணைபுரிந்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அவர்களின் அர்ப்பணிப்பையும் மதிப்பிடும் வகையிலும் சிறப்பாக அமைகிறது.
விண்ணப்பத் தகுதிகள்:
01.01.2025 அன்று 58 வயதைத் தாண்டியிருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும் (வருமானச் சான்று அவசியம்).
தமிழ்ப் பணிகளைச் செய்த விவரக்குறிப்பு.
இரண்டு தமிழறிஞர்களின் பரிந்துரை கடிதம்.
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, துணைவியார் இருந்தால் அவரின் ஆதார் நகல்.
விண்ணப்பப் படிவத்தை மாவட்ட/மண்டல தமிழ் வளர்ச்சி அலுவலகத்திற்கோ அல்லது இணையத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து, முறையாக நிரப்பி 17.11.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.