- Home
- Tamil Nadu News
- சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்க சூப்பர் சான்ஸ்.! மாணவர்களுக்கு அசத்தலான அறிவிப்பு
சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்க சூப்பர் சான்ஸ்.! மாணவர்களுக்கு அசத்தலான அறிவிப்பு
Chennai Medical College : சென்னை மருத்துவ கல்லூரியில் 2025-2026 கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு டெக்னீஷியன் படிப்புகளுக்கு 14.11.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பயில 14.11.2025 வரை விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மருத்துவ கல்லூரியில் 2025-2026 கல்வியாண்டிற்கான ஒரு வருட காலத்திற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் காணப்படும் நிரப்பப்படாத காலி இடங்களை நிரப்ப நேரடி சேர்க்கை மூலம் மாணவர்கள் தேர்வு சேர்க்கை மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதன்படி, சென்னை மருத்துவ கல்லூரியில் கார்டியோசோனோகிராஃபி டெக்னீஷியன் (பெண்). ஈ.சி.ஜி / ட்ரெட்மில் டெக்னீஷியன், கார்டியக் கத்திடெரைசேஷன் லாப் டெக்னீஷியன் (ஆண்). அவசரசிகிச்சை டெக்னீஷியன், சுவாசசிகிச்சை டெக்னீஷியன், டயாலிசிஸ் டெக்னீஷியன். மயக்கமருந்து டெக்னீஷியன், தியேட்டர் டெக்னீஷியன், மூடநீக்கியல் டெக்னீஷியன் (ஆண்). ஈ.இ.ஜி / ஈ.எம்.ஜி டெக்னீஷியன், பன்முக மருத்துவமனைப்பணியாளர் போன்ற ஒரு வருட சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மேற்கண்ட பாடப்பிரிவிகளில் பயில, விண்ணப்பதாரர் 31.12.2025 அன்று 17 வயதை நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் 40 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பன்முக மருத்துவமனை பணியாளர் பாடப்பிரிவிற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாணவர்கள் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000/- பெற தகுதியுடையவராவர்.
விண்ணப்பப் படிவங்கள் சென்னை மருத்துவ கல்லூரியில் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேற்கண்ட பாடப்பிரிவிகளில் பயில்வதற்கான நேரடி மாணவர் சேர்க்கை முறை சென்னை மருத்துவ கல்லூரியில் நடைபெற்று வருகிறது. முழு மாணவர் சேர்க்கை செயல்முறையும் 14.11.2025 அன்று நிறைவுபெறும். எனவே, மேற்கண்ட மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில ஆர்வம் உள்ள தகுதியான மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை ஆட்சித்தலைவர் மாவட்ட ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.