- Home
- Tamil Nadu News
- நவம்பர் மாதத்தில் கொத்தாக வருகிறதா அரசு விடுமுறை.? மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியா.?
நவம்பர் மாதத்தில் கொத்தாக வருகிறதா அரசு விடுமுறை.? மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியா.?
November month holidays : அக்டோபர் மாதத்தில் கொத்து கொத்தாக தொடர் விடுமுறைகளைப் போல நவம்பர் மாதத்தில் விடுமுறை கிடைக்குமா.? என அரசு ஊழியர்கள் முதல் மாணவர்கள் வரை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

விடுமுறை என்றாலே மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை கொண்டாடுவார்கள். அந்த வகையில் அக்டோபர் மாதம் கொத்து கொத்தாக விடுமுறையை அள்ளிக்கொடுத்தது. காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி, ஆயூத பூஜை விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை கிடைத்தது.
இதனை தொடர்ந்து தீபாவளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என மாணவர்கள் மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கும் குஷியான மாதமாக அக்டோபர் மாதம் அமைந்தது. அதிலும் மழை பாதிப்பால் கூடுதல் விடுமுறையும் கிடைத்தது.
எனவே இதே போல நவம்பர் மாதமும் விடுமுறையை அள்ளிக்கொடுக்கும் மாதமாக இருக்கமா.? என ஆவலோடு காத்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களும் ஒவ்வொரு மாதமும் காலண்டரில் இந்த மாதம் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை வருகிறது என தேடி தேடி பார்ப்பார்கள். அந்த வகையில் நவம்பர் மாதம் காலண்டரை பார்த்த அனைவருக்கும் ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.
நவம்பம் மாதத்தில் எந்தவித கூடுதல் அரசு விடுமுறைகளும் இல்லை. அதிலும் நவம்பர் மாதத்தில் சனி, ஞாயிறு என மொத்தமாக 10 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கவுள்ளது. அதிலும் ஒரு சில சனிக்கிழமையில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படவுள்ளது.
அதே நேரம் தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் பல மாவட்டங்களை அச்சுறுத்தும் வகையில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே நவம்பரில் அரசு விடுமுறை இல்லையென்றாலும் மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதாகவே கணிக்கப்பட்டுள்ளது.