- Home
- Tamil Nadu News
- மாணவர்களுக்கு 14 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை.! யாருக்கு தெரியுமா.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
மாணவர்களுக்கு 14 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை.! யாருக்கு தெரியுமா.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
தமிழக அரசு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்குகிறது. 1 முதல் பொறியியல் படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.14,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான காலை உணவு வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை, இலவச பேருந்து பயண அட்டை,
இலவச பாட புத்தகம், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படுகின்றன 1-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை தடுக்க சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது இது போல பல திட்டங்களை வழங்கி வரும் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத்துறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை
அந்த வகையில் பார்வையற்ற மாணவர்களுக்கு மாவட்டம் முழுவதும் இலவச பேருந்து பயணச் சலுகையானது வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி, வேலை, மருத்துவமனை பயணங்களுக்கு 100 கி.மீ. வரை பயணச் சலுகையும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவி தொகை பெற்றிட விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் 1 முதல் பொறியியில் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையானது 2 ஆயிரம் ரூபாய் முதல் 14ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல பார்வையற்ற வாசிப்பாளர்கள் உதவித்தொகை தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்
கல்வி உதவித்தொகை:
1முதல் 5 மாணவர்களுக்கு 2,000 ரூபாயும், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 6,000 ரூபாயும், 9 முதல் 12ஆம் வகுப்பிற்கு 8ஆயிரம், இளங்கலை 12 ஆயிரம், முதுகலை, மருத்துவம், பொறியியல் 14ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
பார்வையற்ற வாசிப்பாளர்கள் உதவித்தொகை
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 3 ஆயிரம் ரூபாயும், இளங்கலை 5ஆயிரம், முதுகலை தொழில்நுட்பம் 6ஆயிரம்,
கல்வி உதவித்தொகை பெற தகுதிகள் என்ன.?
தகுதிகள்:
அரசு மற்றும் அரசு உதவி பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்
முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண்
பிற கல்வி உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது
விண்ணப்பிக்கும் முறை:
மாணவர்கள் மதிப்பெண் சான்றுடன் https://www.tnesevai.tn.gov.in மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர், விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 20.07.2025 என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.