தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.  அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மனநிறைவு படும்படி உதவித்தொகை வழங்குவோம் எனவும் உறுதியளித்துள்ளார்.

Edappadi enters the election fray : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் நிர்வாகிகளை நேரில் அழைத்து ஒன் டூ ஒன் மீட்டிங்கை நடத்தி வருகிறது. அடுத்ததாக எதிர்கட்சியான அதிமுக திமுகவை வீழ்த்த கூட்டணியை பலப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.

 இதில் முதல் கட்டமாக மீண்டும் பாஜகவை தங்கள் அணியில் இணைத்துள்ளது. அடுத்தாக தேர்தல் களத்திற்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற தலைப்பில் மக்களை சந்தித்து வரும் நேற்றைய தினம் விழுப்புரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.

விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்த அதிமுக

அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், விழுப்புரம் மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம் அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது, இயற்கை சீற்றங்க பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்தோம், விவசாயிகளை காக்கும் அரசாக அதிமுக அரசு இருந்தது. கொரோனா பாதிப்பு காலத்தில் விவசாயிகள் கஷ்டத்தில் பங்கெடுத்த அரசு பயிற்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டது. விலையில்லா ஆடு, மாடு உள்ளிட்டவைகளை வழங்கியது அதிமுக அரசு, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு, ஆனால் திமுக தேர்தலுக்கு முன்பாக கொடுத்த 523 வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது.

மன நிறைவோடு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்

திமுக அரசு குடும்பத்தலைவிக்கு உரிமை தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. ஆட்சிக்கு வந்து 25 மாதம் கழித்து தான் அந்த தொகையை கொடுத்தது. அந்த தொகையை மக்களுக்கு கொடுப்பதற்காக சட்டமன்றத்தில் அதிமுக அரசு அழுத்தம் கொடுத்தன் பேரில் உரிமை தொகையை கொடுக்கப்பட்டது. 2026 இல் தேர்தல் வரவுள்ள நிலையில் 30 லட்சம் பேருக்கு விதிகளை தளர்த்தி மகளிர் உரிமை தொகை கொடுக்கப்படும் என தேர்தலுக்காக என ஸ்டாலின் நடிப்பதாகவும் விமர்சித்தார். 

அதிமுக 2021 சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குறுதியாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கப்படும் என அறிவித்தோம். ஆனால், 1,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1,500 ரூபாயை விட்டுவிட்டீர்கள். எனவே நான் இப்போதும் சொல்கிறேன், அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மனநிறைவு படும்படி நிச்சயம் வழங்குவோம் என கூறினார்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக

திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்வோம் என கூறினார்கள் அப்படி இதுவரை இல்லை, வீட்டு வரி குடிநீர் வரி இப்படி பல வரிகளை மக்களிடம் திணித்து வருகிறது திமுக அரசு இதுதான் திராவிட மாடல் ஆட்சி கேஸ் சிலிண்டர் மானியம் மாதம் தோறும் 100 வாழப்படும் என தெரிவித்தனர் ஆனால் இதுவரை தரவில்லை, திமுக ஆட்சி வந்தால் கல்விக்கடன் ரத்து என்று கூறினார் 

இதுவரை ரத்து செய்யவில்லை என பட்டியலிட்டு விமர்சித்தார். குடும்பம் அரசியல் அதிமுகவில் இல்லை, அதிமுக கட்சியில் யார்வேண்டுமாலும் வரலாம். அப்படி பட்ட கட்சி அதிமுக, தேர்தல் வருவதால் நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார், ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கு நோவல் பரிசு கொடுக்கலாம் ஸ்டாலினுக்கு, தேர்தல் ஜுரம் வந்துவிட்டது ஸ்டாலினுக்கு இதுவே நமக்கு கிடைத்த வெற்றி எனவே வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.