- Home
- Tamil Nadu News
- மகளிர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! மானியத்துடன் கடன் பெற வாய்ப்பு- தேதி அறிவித்த தமிழக அரசு
மகளிர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! மானியத்துடன் கடன் பெற வாய்ப்பு- தேதி அறிவித்த தமிழக அரசு
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜூன் 12, 2025 அன்று நடைபெறும். இம்முகாமில் உறுப்பினராகச் சேர்ந்து பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடன் பெறலாம்.

மகளிர்களுக்கான தமிழக அரசு திட்டங்கள்
பெண்களுக்கு உதவிடும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மானிய கடன் திட்டம், இலவச தையல் இயந்திரம், மகளிர்கள் சொந்த தொழில் செய்ய கடன் உதவி என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் பெரும்பாலும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்கள் யாருடைய உதவி இல்லாமல் சிரமப்படுவார்கள்.
எனவே அவர்களுக்கு உதவிட தமிழக அரசின் திட்டங்கள் ஏராளமாக உள்ளது. அந்த திட்டங்களில் பயன்பெற நலவாரியத்தில் உறுப்பினராக சேர்வது முக்கியமாகும். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கைம்பெண்கள்.நலிவுற்ற பெண்கள். ஆதரவற்ற பெண்கள்
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள். ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர்களுக்கான நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 8ஆவது தளத்தில் 12.06.2025 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ள பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அலைபேசி ஆகியவற்றை எடுத்து வந்து www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உதவ முடியும். இத்திறன் பயிற்சி மேற்கொள்ளுதல் வாயிலாக சுய தொழில் புரிய மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TADHCO)ன் கீழ் செயல்படுத்தப்படும் சுய தொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
சுய தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் வங்கிக் கடன்
எனவே, சென்னை மாவட்டத்தில் ள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள். ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்