- Home
- Tamil Nadu News
- துரோகியா அண்ணாமலை? அதிமுக-பாஜக கூட்டணியை உடைக்க சதி..! குமுறும் நயினார் ஆதரவாளர்கள்
துரோகியா அண்ணாமலை? அதிமுக-பாஜக கூட்டணியை உடைக்க சதி..! குமுறும் நயினார் ஆதரவாளர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கூட்டணி ஆட்சி குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்த நிலையில், அண்ணாமலை கூட்டணி ஆட்சி உறுதி எனக் கூறியுள்ளார்.

தமிழக அரசியல் - சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுக இடையே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற மோதல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் பலத்தோடு உள்ள நிலையில்
இதனை எதிர்கொள்ளும் வகையில் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவிதார். இதற்காக முதல் கட்டமாக நடிகர் விஜய் கட்சியான தவெகவை கூட்டணியில் இணைக்க திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் விஜய்யின் கூட்டணி ஆட்சி, தொகுதி பங்கீடு தொடர்பான நிபந்தனைகளால் கூட்டணி ஏற்படாமல் சென்றது.
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி
இதனையடுத்து மீண்டும் பாஜகவுடன் உறவை புதுப்பித்த அதிமுக, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும் என அறிவித்தது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த சில நாட்களிலேயே மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகத்தில் அமைச்சரவையில் பங்கு, கூட்டணி ஆட்சி என்ற கருத்தை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார். கூட்டணி மட்டுமே கூட்டணி ஆட்சி இல்லையென கூறினார்.
இருந்த போதும் மீண்டும், மீண்டும் அமித்ஷா திட்டவட்டமாக அமைச்சரவையில் பங்கு என அறிவித்ததால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். இதனை சமாளிக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமியும் திணறிவருகிறார். இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி தான் என அண்ணாமலையும் உறுதி செய்து பேசியிருப்பது இரு தரப்பிற்கும் இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலைக்கு வந்துள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி தான்- அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக பாஜக கூட்டணியில் என்ன பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்பதிலும் எனது பங்கு இல்லை. இந்த கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என பேசினார்கள் என்பதிலும் எனது பங்கு இல்லை. அமித்ஷா ஒரு முறை அல்ல பல முறை பேட்டியில் தெளிவாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என குறிப்பிட்டுள்ளார். தொண்டனாக எனது கருத்தை மாற்றிக் கொண்டு கூட்டணி ஆட்சி இல்லை என நான் சொன்னால் பாஜகவில் தொண்டனாக இருப்பதற்கு எனக்கு தகுதி இல்லை.
எனது தலைவர்கள் சொன்ன கருத்திலேயே நான் சந்தேகத்தை எழுப்பினால் இந்த கட்சியில் நான் தொண்டனாக இருக்கக் கூடாது தலைவனாக இருக்கக் கூடாது. கூட்டணி தொடர்பாக தலைவர்கள் பேசி உள்ளார்கள். என் தலைவர்கள் கட்சி கூப்பிட்டு தொண்டர்களை கூப்பிட்டு அவருடைய நிலைப்பாட்டை மாற்றும் பொழுது நானும் மாற்றி கொள்கிறேன்.
அண்ணாமலை பேச்சால் சர்ச்சை- முறியும் அதிமுக
அமித்ஷா அவர்கள் ஒரு முறை மட்டும் செல்லவில்லை மூன்று முறை மீண்டும் மீண்டும் கூட்டணி ஆட்சி என தெரிவித்துள்ளார். அதிமுகவிற்கு மாற்றுக் கருத்து இருந்தால் கண்டிப்பாக அமித்ஷாவிடம் பேசலாம் என அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் பேட்டிக்கு பாஜகவிற்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கூட்டணி தொடர்பாக அண்ணாமலை ஏன் கருத்தை தெரிவிக்கிறார். அண்ணாமலை தற்போது எந்த பொறுப்பில் உள்ளார் என நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதிமுக- பாஜக இடையே ஏற்கனவே மறைமுகமாக மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சு இரு தரப்புக்கும் இடையே மேலும் மோதலை அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. கூட்டணி ஆட்சி இல்லையென எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த கருத்திற்கு அதிமுக என்ன பதிலடி கொடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.