- Home
- Tamil Nadu News
- Tamilnadu Government: விழுப்புரத்திற்கு ஆனந்தன்! சென்னைக்கு ஆதவ்! கோவை யார் தெரியுமா? மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் லிஸ்ட்!
Tamilnadu Government: விழுப்புரத்திற்கு ஆனந்தன்! சென்னைக்கு ஆதவ்! கோவை யார் தெரியுமா? மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் லிஸ்ட்!
District Wise In Charge Ministers: தமிழ்நாடு அரசு, மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், நலத்திட்டங்களைக் கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. இவர்கள் அவசரகால பணிகளை மேற்கொள்வார்கள்.

தமிழ்நாடு அரசு
மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இயற்கைச் சீற்றம்
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்:- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சார்ந்த திட்டப் பலன்களும் பொதுமக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று மற்றும் பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளில், இந்தத் திட்டப் பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து, விரைவுபடுத்தும் வகையில் ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக (Monitoring Officers) நியமித்து அரசு கண்காணித்து வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமைச்சர்களையும் இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகள்
அதன்படி அமைச்சர் பெருமக்களை அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், வருவாய் மாவட்ட வாரியாக, அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.
ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!
பொறுப்பு அமைச்சர்கள் விவரம்
விழுப்புரம், கடலூர் – ஆனந்த், சென்னை, திருவண்ணாமலை – ஆதவ் அர்ஜுனா, மயிலாடுதுறை வெங்கட்ரமணன், திருவள்ளூர் – ரா.குமார், நெல்லை – மரிய வில்சன், பெரம்பலூர் -ராஜ்மோகன், காஞ்சிபுரம் – க.தென்னரசு, திருப்பத்தூர் – ரஞ்சித்குமார், செங்கல்பட்டு -சரத்குமார், கள்ளக்குறிச்சி – வன்னி அரசு, ராணிப்பேட்டை – காந்திராஜ், தருமபுரி, அரியலூர் – ராஜ்குமார், நாகப்பட்டினம் - ஷாஜகான், தஞ்சாவூர் – வினோத், திருச்சி – ரமேஷ், கரூர் – விஜயலஷ்மி, நாமக்கல் – லோகேஷ் தமிழ்செல்வன், திருப்பூர் – அருண்ராஜ், நீலகிரி -கமலி, வேலூர் – விஜய் பாலாஜி, ஈரோடு - செங்கோட்டையன், கோவை - சம்பத்குமார், மதுரை, தேனி – நிர்மல்குமார், புதுக்கோட்டை – முகமது பர்வேஸ், சிவகங்கை - டி.கே.பிரவு, கிருஷ்ணகிரி – கீர்த்தனா, விருதுநகர் – ஜெகதீஸ்வரி, திருவாரூர் – விஸ்வநாதன், தூத்துக்குடி – ஸ்ரீநாத், ராமநாதபுரம் -மதன்ராஜா, சேலம் –பார்த்திபன், கன்னியாகுமரி -ராஜேஷ்குமார், தென்காசி – ராஜீவ், திண்டுக்கல் – விக்னேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நலத்திட்ட உதவிகள்
வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர் பெருமக்கள் சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (Monitoring Officers)மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

