- Home
- Tamil Nadu News
- ஆட்டம் காணும் அமமுக.. டிடிவி.தினகரனின் வலது கரம் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.. வெளியான அதிர்ச்சி காரணம்?
ஆட்டம் காணும் அமமுக.. டிடிவி.தினகரனின் வலது கரம் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.. வெளியான அதிர்ச்சி காரணம்?
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகரும், டிடிவி.தினகரனின் தளபதியுமான எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்த முடிவை எதிர்த்ததால் நீக்கப்பட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரிவு செயலாளராகவும் தென் மண்டல அமைப்பாளராகவும் இருந்து வந்தவர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகத் திகழ்கிறார். சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவர் மாணிக்கராஜா. தென் மண்டலத்தில் இவரது அனுமதியில்லாமல் கட்சியில் எந்த முடிவையும் டிடிவி. தினகரன் எடுத்ததில்லை. இந்த அளவுக்கு முக்கிய பிரமுகரான மாணிக்கராஜா அமமுகவில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டுள்ளார்.
S.V.S.P.மாணிக்கராஜா
இதன் காரணமாக கழக துணைப் பொதுச்செயலாளர் .S.V.S.P.மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார். அவர் அமமுகவில் நீக்கப்பட்டதற்கான காரணத்தை பார்க்கலாம்.
அதிமுக - பாஜக கூட்டணியால் அதிருப்தி
2026 சட்டமன்ற தேர்தலில் துரோகி எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டுவேன், கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி.தினகரன் திடீரென அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். டிடிவி.தினகரனின் முடிவு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக அமமுக துணைப் பொதுச்செயலாளரும், கடம்பூர் இளைய ஜமீன் மாணிக்கராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
திமுவில் ஐக்கியம்
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடம்பூர் இளைய ஜமீன் மாணிக்கராஜா இன்று இணைய உள்ள நிலையில் அவர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கப்படுவதாக டிடிவி.தினகரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

