- Home
- Tamil Nadu News
- மயிரிழையில் உயிர்தப்பிய அதிமுக கல்யாணசுந்தரம்..! 4 பல்டி அடித்து அப்பளம் போல் நொறுங்கிய கார்
மயிரிழையில் உயிர்தப்பிய அதிமுக கல்யாணசுந்தரம்..! 4 பல்டி அடித்து அப்பளம் போல் நொறுங்கிய கார்
அதிமுக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம், உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது அவரது கார் பயங்கர விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய கல்யாணசுந்தரம்
அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகி கல்யாணசுந்தரம், கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த அவர், கட்சியில் செய்தித்தொடர்பாளர் பதவியை வகித்து வருகிறார். தற்போது கல்யாணசுந்தரம் விபத்த்தில் சிக்கியுள்ளார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தலைவர் விபத்து
உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தில், கல்யாணசுந்தரம் அவர்களின் கார் 4 பல்டி அடித்து, அப்பளம் போல் நொறுங்கி பல சேதங்களைச் சந்தித்தது. அதிர்ச்சிகரமான இந்த விபத்து, அதற்கு மத்தியில் இருந்தாலும், அவர் சிறு காயங்களோடு உயிர் பிழைத்தார்.
சாட்டை துரைமுருகன் பதிவு
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிமுக செய்தித்தொடர்பாளர் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் சென்ற மகிழுந்து உளுந்தூர்பேட்டை அருகே பெரும் விபத்துக்குள்ளாகி சிறு காயங்களோடு உயிர் பிழைத்து நலமாக உள்ளார் என்ற செய்தி ஆறுதலைத் தருகிறது” என்று பதிவிட்டுள்ளார். இந்த செய்தி அவரது குடும்பத்தினருக்கு, கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை அளித்துள்ளது.