திமுக பக்கம் சீமான்..! அதிமுக பக்கம் விஜய்..! சபரீசன் போடும் பக்கா ஸ்கெட்ச்..!
தனித்தே போட்டி எனப் பிடிவாதம் காட்டி வந்த சீமானை தற்போதைய அரசியல் களம் கூட்டணி முடிவுக்கு தள்ளி இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏற்கெனவே சீமான் 2006ல் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்திருக்கிறார்.

எப்போது விஜயின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானதோ அதுவரை அரசியல் களத்தில் சீமானுக்கு இளைஞர்களிடத்தில் இருந்த முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. நடிகர் அரசியலுக்கு வருவதால்அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் மீடியாக்களும் இலவசமாக விளம்பரப்படுத்தத் தொடங்கினர்.
திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்ததனால் மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டு ஒரு மாற்று வேண்டுமென நெடுங்காலமாக பெரும்பாலானோர் கருதி வந்த வேளையில் இளைஞர்களின் கவனம் சீமான், அண்ணாமலையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. ஆனால் தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. இதுவரை வரை சீமானுக்கு வந்த ஓட்டுக்கள், பெரும்பாலும் அப்படியே விஜயின் பக்கம் திரும்பப் போகிறது. திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளில் இருக்கும் இளைஞர்களின் ஓட்டுக்கள் கூட விஜய்க்கு மாறப் போகிறது என்கிறார்கள். இதனால் பாதிக்கப்படப் போவது நாதக. இந்த கட்சி சென்ற தேர்தலில் வாங்கிய ஓட்டுக்கள் சதவிகிதம் இந்த தேர்தலில் அதல பாதாளத்தில் விழப் போவதை சீமானே உணர்ந்துள்ளார்.
அதனால்தான் விஜயின் அரசியல் எண்ட்ரிக்கு முன்பு தனது தம்பி என உருகிய சீமான், அதன் பிறகு ரோட்டில் அடிபட்டு சாவாய் என்றெல்லாம் விஜயை சபித்தார். இந்நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து மறைவை அடுத்து ஜூலை 19ம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருந்தார் சீமான். அந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்று சொல்லப்பட்டாலும் மறைமுக அரசியல் நட்பு வலுவாக உருவானதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு சீமானின் அரசியலில் சில மாற்றங்கள் கண்கூடாக தெரிந்தது. அதனை தொடர்ச்சியாக செய்வதா? வேண்டாமா? என ஆலோசிக்கவே சில நாட்களில் முதல்வரின் மருமகனான சபரீசனை ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார் சீமான் என கூறப்பட்டது. இந்த சந்திப்பின்போது தனக்கு நெருக்கமான ஒரு சிலரை மட்டுமே அழைத்துச் சென்று மணி கணக்கில் ஆலோசனை செய்திருக்கிறார் சீமான். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பலமான அணிகள் போட்டியிடுவதால் நாதகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை வாக்கு சதவிகிதம் குறைந்துவிட்டால் நாதகவின் எதிர்காலம் பெரிய அளவில் கேள்விக்குறியாகும்.
எனவே வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சீமான் இந்த முறை சில எம்எல்ஏக்களுடன் கோட்டைக்குச் சென்று விட வேண்டும் என்ற திட்டமிட்டுள்ளார். குறைந்தது தான் மட்டுமாவது வெற்றி பெற்று, ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் அவர் இருப்பதால் சில டீலங்குகளுக்கு தயாராகி திமுகவில் இருப்பவர்களை சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் சபரீசன் உடனான இந்த சந்திப்பில் தனது வருங்கால திட்டம் குறித்த விரிவாக பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இரு தரப்பிலும் சில அட்ஜஸ்ட்மெண்டுகள், சில காம்ப்ரமைஸ்கள் செய்ய உடன்பாடாகி இருப்பதாக சொல்ல்லப்பட்டது.
இந்நிலையில், தனித்து களமிறங்குவதாக கூறி வந்த விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும், தவெகவுக்கு அமித் ஷா ஆதவளித்து வருவதகாவும் அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதனையடுத்தே முன்பே சீமானிடம் டீல் பேசியுள்ள திமுக, நாதகவை கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என மீண்டும் கச்சை கட்டி இறங்கியுள்ளதாக கூறுகின்றனர். சீமானிடம் உள்ள 8 சதவிகித வாக்கு வங்கி திமுக கூட்டணிக்கு கைகொடுக்கும் என்கிறனர். தனித்தே போட்டி எனப் பிடிவாதம் காட்டி வந்த சீமானை தற்போதைய அரசியல் களம் கூட்டணி முடிவுக்கு தள்ளி இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏற்கெனவே சீமான் 2006ல் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்திருக்கிறார்.