- Home
- Tamil Nadu News
- 6 அமைச்சர்கள் வந்தோம் நியாபகம் இருக்கா.. இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய செங்கோட்டையன்
6 அமைச்சர்கள் வந்தோம் நியாபகம் இருக்கா.. இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய செங்கோட்டையன்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்ற இயலாது எனத் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் vs எடப்பாடி பழனிசாமி
அண்மையில் ஈரோடு மாவட்டம், கோபியில் கட்சியினருடன் கலந்துரையாடிய அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், வருகிற 5ஆம் தேதி தன் மனதை வெளிப்படையாக பகிரப்போவதாக அறிவித்திருந்தார். இந்த தகவல், அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதலே கோபி சட்டமன்றத் தொகுதி அலுவலகம் சுற்றுப்புறம் பரபரப்பாக காணப்பட்டது. காலை 10 மணிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களை நேரில் சந்தித்து உரையாடினார்.
அதிமுக பிளவு
அதற்கு முன், அவர் தமது இல்லத்திலிருந்து அலுவலகம் வரும்போது, தொண்டர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரச்சார வாகனத்தில் பயணம் செய்தார். வழியெங்கும் கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக அவரை வரவேற்றனர். கவனிக்கத்தக்க வகையில், அவர் வந்த வாகனத்தில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மட்டுமே இருந்தன.
அதிமுக தலைவர் செங்கோட்டையன்
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், “தமிழகம் முழுக்க செல்ல வேண்டிய பேட்டி இது. 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுக தொடங்கினார். 1977 ஆம் ஆண்டு புரட்சி தலைவரோடு நல்லாசியோடு பொதுக்குழு நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் என்னை பொருளாராக நியமித்தார் புரட்சி தலைவர். பல்வேறு முக்கிய பொறுப்புகளை எனக்கு கொடுத்து அழகு பார்த்தனர் அதிமுக தலைவர்கள். புரட்சி தலைவரின் செல்வாக்கு என்பது பேரறிஞர் அண்ணாவால் போற்றக்கூடிய தலைவராக இருந்தார்.
அதிமுக அதிகார மோதல்
எல்லோராலும் பாராட்டக்கூடிய தலைவராக அவர் விளங்கினார். 1977-ம் ஆண்டில் போட்டியிட எனக்கு அறிவுரை வழங்கினார். அப்போது என் பெயரை சொல் நிச்சயம் வெற்றி பெறுவாய் என்று கூறினார். அம்மா அவர்கள் சிறந்த ஆட்சியை தந்தார். இந்திய நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு சிறந்த ஆளுமை மிக்க முதலமைச்சராக பவனி வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன.
எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றச்சாட்டு
தன்னை விமர்சித்தவர்களை அரவணைத்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. அதிமுக உடைந்து விடக்கூடாது என்பதற்காக நான் பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன். தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டும்தான் இனி எடப்பாடி பழனிச்சாமி உடன் பரப்புரைகளின் பங்கேற்பேன்.
அதிமுக ஒருங்கிணைப்பு
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. 6 அமைச்சர்கள் சென்று , பிரிந்து போனவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி இடம் வலியுறுத்தினோம். அதை எதையும் கேட்க அவர் தயாராக இல்லை என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.