- Home
- Tamil Nadu News
- #BREAKING: அதிமுக பொதுச்செயலாளருக்கு எதிரான வழக்கு! கோர்ட் அதிரடி! குஷியில் எடப்பாடி பழனிசாமி!
#BREAKING: அதிமுக பொதுச்செயலாளருக்கு எதிரான வழக்கு! கோர்ட் அதிரடி! குஷியில் எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி காட்டியது. இதை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதலில் இடைக்கால தடை விதித்தார். இந்நிலையில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்ககூடாது என்று சூரியமூர்த்தி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து பிறப்பித்த உத்தரவை நீதிபதி திரும்ப பெற்றுக்கொண்டார்.
இவ்வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உரிமை நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.