MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மக்களே இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்கா! வெயிட் அண்ட் சீ!

மக்களே இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்கா! வெயிட் அண்ட் சீ!

வடமேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 03 2025, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Google

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து இன்று காலை 5.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி, காலை 8.30 மணி அளவில், வடக்கு ஒடிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.

26
Image Credit : Google

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

Related Articles

Related image1
திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை..! உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?
Related image2
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைக்கு மேல் கத்தி! இனி தப்பவே முடியாதா? நீதிமன்றம் அதிரடி!
36
Image Credit : Google

அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் செப்டம்பர் 06 மற்றும் 07 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

46
Image Credit : Google

செப்டம்பர் 08 மற்றும் 09 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

56
Image Credit : Asianet News

வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று முதல் செப்டம்பர் 05 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும்.

வெப்ப அளவின் வேறுபாடு

இன்று முதல் செப்டம்பர் 05 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

66
Image Credit : Google

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி
Recommended image2
Now Playing
சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
Recommended image3
மழை வருமா? வெயில் சுட்டெரிக்கப் போகுதா? வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்
Related Stories
Recommended image1
திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை..! உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?
Recommended image2
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைக்கு மேல் கத்தி! இனி தப்பவே முடியாதா? நீதிமன்றம் அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved