MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சன் டிவி, கலைஞர் டிவிக்கு போட்டி.. தவெக சேனலுக்காக களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சன் டிவி, கலைஞர் டிவிக்கு போட்டி.. தவெக சேனலுக்காக களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

TVK TV Channel : தமிழக வெற்றிக்கழகத்திற்கு பிரத்யேக டி.வி சேனல் தொடங்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : May 19 2026, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தவெக டிவி சேனல்
Image Credit : Asianet News

தவெக டிவி சேனல்

தமிழக அரசியலில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் அடங்காத நிலையில், தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. அது, தமிழக வெற்றிக்கழகத்திற்கு (தவெக) பிரத்யேக டி.வி சேனல் உருவாகும் வாய்ப்பு குறித்த அரசியல் வட்டார பேச்சு தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தமிழக அரசியலில் ஊடகங்களின் தாக்கம்
Image Credit : X

தமிழக அரசியலில் ஊடகங்களின் தாக்கம்

தமிழக அரசியலில் ஊடகங்களின் தாக்கம் எவ்வளவு முக்கியம் என்பது கடந்த பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது அரசியல் கருத்துகளையும், அரசின் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஊடக பலத்தை பயன்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், தற்போது ஆட்சியில் இருக்கும் தவெகவும் தங்களுக்கென ஒரு தகவல் பரிமாற்ற மேடையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ
Related image2
சென்னை - பெங்களூரு வெறும் 90 நிமிடம்? ஆந்திரா வழியாக உருவாகும் புதிய எக்ஸ்பிரஸ்வே வேகம்!
35
தவெக டிவி சேனல் ஆலோசனை தீவிரம்
Image Credit : X

தவெக டிவி சேனல் ஆலோசனை தீவிரம்

இந்த முயற்சியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது “நேரடி அரசியல் தொடர்பு” என்ற யுக்திதான். அரசின் திட்டங்கள், முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள், கட்சியின் சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகள் ஆகியவற்றை எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே இதற்குப் பின்னணியாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவும் தகவல் அரசியலுக்கு இணையாக, பாரம்பரிய டி.வி ஊடகத்திலும் வலுவான அடையாளம் தேவைப்படுவதாக தவெக வட்டாரங்கள் கருதுகின்றன.

45
ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பொறுப்பு
Image Credit : X

ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பொறுப்பு

இந்த சேனல் வெறும் செய்தி சேனலாக மட்டும், பொழுதுபோக்கு, இளைஞர்கள், சமூக விழிப்புணர்வு மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை இணைக்கும் வகையில் எந்த தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உரிமம், ஒளிபரப்பு அனுமதி மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் குறித்து ஆலோசனைகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

55
தமிழக அரசியலில் புதிய மீடியா
Image Credit : ANI

தமிழக அரசியலில் புதிய மீடியா

வெற்றி பெற்ற பிறகு உலக ஊடகத்திலும் தனி அடையாளத்தை உருவாக்குவது, அரசியலில் நீண்டகால அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு தவெக தரப்பில் புதிய அறிவிப்புகள், லோகோ வெளியீடு அல்லது டிஜிட்டல் மீடியா திட்டங்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்கனவே அதிகரித்துள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
தமிழக வெற்றி கழகம்
சன் தொலைக்காட்சி
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Chennai 2.0 : நியூயார்க் நகருக்கு இணையாக மாறப்போகும் சென்னை! - CM விஜய்யின் மாஸ்டர் பிளான்
Recommended image2
Tamilnadu Power Cut: தமிழகம் முழுவதும் நாளை (18-06-2026) முக்கிய இடங்களில் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.!
Recommended image3
Now Playing
"13 லட்சம் கோடி கடனை காட்டி ஏமாற்றாதீங்க!" தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேட்டி!
Related Stories
Recommended image1
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ
Recommended image2
சென்னை - பெங்களூரு வெறும் 90 நிமிடம்? ஆந்திரா வழியாக உருவாகும் புதிய எக்ஸ்பிரஸ்வே வேகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved