பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! அடுத்த 12 நாட்கள் லீவே இல்லை! தொடர்ந்து ஸ்கூல் தான்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 17 வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜனவரி 25ம் தேதி பள்ளிகள் செயல்படும்.
Pongal Festivel
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை இரண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது ஜனவரி 14 தை பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் ஆகிய மூன்று நாட்கள் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.
Pongal Holiday
இடையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். ஆகையால் ஜனவரி 17ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழக அரசு விடுமுறை அறிவித்தார்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை! ஆனால்! ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு!
School Holiday
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. இடையில் ஜனவரி 13ம் தேதி திங்கள் கிழமை விடுமுறை எடுத்தால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
Schools Working Days
இந்நிலையில் பொங்கல் விடுமுறை அறிவிப்பால் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது. அதாவது ஜனவரி 20 முதல் 31ம் தேதி வரை தொடர்ச்சியாக 12 நாட்ஙகள் பள்ளிக்கு வேலை நாட்களாகும். எப்படி என்பதை பார்ப்போம்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!
School Student
அதாவது பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 20ம் தேதி திங்கள் கிழமை முதல் பள்ளிகள் இயங்கும். ஜனவரி 17ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்பட உள்ளன. அதனை தொடர்ந்து 26ம் தேதி ஞாயிறு அன்று குடியரசு தினம் என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியது காட்டாயமாகும். திங்கள் முதல் ஞாயிறு வரை தொடர்ந்து 7 வேலை நாட்களாக ஆகிவிடுகிறது.
இதையும் படிங்க: மிரட்டும் HMPV வைரஸ்! தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம்! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
School Student News
மேலும் அடுத்த திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியாக ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். இதனால் தொடர்ச்சியாக 12 நாட்கள் பள்ளிகள் வேலை நாட்களாகும்.