- Home
- Tamil Nadu News
- ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.! ஆசிரியர்களுக்கு பறந்த நோட்டீஸ்.! பள்ளிக்கல்வித்துறை அதிரடி
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.! ஆசிரியர்களுக்கு பறந்த நோட்டீஸ்.! பள்ளிக்கல்வித்துறை அதிரடி
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகளவிலான அரசுப்பள்ளி மாணவர்கள் தோல்வியடைந்ததை அடுத்து, கல்வித்துறை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் தான் மாணவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக உள்ளனர். அந்த வகையில் மாதா,பிதா, குரு என வரிசைப்படுத்துகிறார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. இதன் படி பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடம் தான் எதிர்கால வாழ்க்கையில் மாணவர்கள் முன்னேற்றத்திற்கு படியாக உள்ளது.
அந்த வகையில் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு தேர்வு முக்கியமாக உள்ளது. இந்த நிலையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் பெரும் அளவில் தோல்வி அடைந்துள்ளனர்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள்
மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316, மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178, தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%) ஆகும், இதேபோல 11ஆம் வகுப்பில் 92 சதவீதம் பேரும் தேர்ச்சிபெற்றனர். இந்த நிலையில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் ஒரு லட்சத்து 218 மாணவர்கள் தோல்வியடைந்தனர். அதில், 73,820 பேர், அதாவது 71.5 சதவீதம் பேர், அரசுப் பள்ளி மாணவர்களாக உள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
எனவே தனியார் பள்ளிகளை விட அரசு மற்றும் அரசு மாதிரிப்பள்ளிகளில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைவதற்கு காரணம் என்ன.? என பள்ளிக்கல்வித்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக தேர்ச்சிபெறாத மாணவர்களின் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, 17ஏ நோட்டீஸை கல்வித் துறை வழங்கி வருகிறது. குறிப்பாக, அரசு மாதிரிப் பள்ளிகளில் தேர்ச்சிபெறாத மாணவர்களின் வகுப்பு ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை உடனடியாக அளிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விளக்கம் கேட்டு ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
இந்த சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு அனுப்பியுள்ள 17ஏ நோட்டீசுக்கு ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு பாடங்கள் நடத்தும் பணியை விட இதற்கு சம்பந்தம் இல்லாத எமிஸ், கலைத் திருவிழாக்களையும் மேற்கொள்ள ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எனவே தேர்ச்சி பெறாத மாணவர்கள் தொடர்பாக ஆசிரியர்களை பொறுப்பாக்கி விளக்கம் கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாத என தெரிவித்துள்ளனர். எனவே கல்வித்துறையின் இந்த நடவடிக்கையை கை விட வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.