IML 2025: மீண்டும் கிரிக்கெட் களத்தில் சச்சின், லாரா, காலிஸ்! 90 கிட்ஸ்களே ரெடியா?
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) போட்டித் தொடர் மூலம் ஜாம்பவன்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலிஸ் மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளனர்.

IML 2025: மீண்டும் கிரிக்கெட் களத்தில் சச்சின், லாரா, காலிஸ்! 90 கிட்ஸ்களே ரெடியா?
இந்தியாவில் கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதை விட ஒரு மதம் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்தியாவில் கிரிக்கெட் ஒவ்வொருவரின் உணர்வுடன் கலந்துள்ளது. இதனால் தான் பிசிசிஐ உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பாக விளங்கி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் எவ்வளவு ரசிகர்கள் உள்ளனர் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இந்நிலையில், இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்பட உள்ளது. டி20 பார்மட்டில் நடத்தப்படும் இந்த தொடரில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 2025ம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் பிப்ரவரி 22ம் தேதி முதல் மார்ச் 16ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
கிரிக்கெட் களத்தில் சச்சின், லாரா
இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த 6 அணிகளிலும் ஓய்வுபெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், பிரையன் லாரா, குமார் சங்கக்காரா, ஷேன் வாட்சன் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்திய அணிக்கு 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இலங்கை அணிக்கு குமார் சங்கக்காராவும், ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சனும், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரையன் லாராவும், தென்னாப்பிரிக்க அணிக்கு பிரையன் லாராவும் கேப்டனாக செயல்பட உள்ளனர்.
மகளிர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார்? யார்? அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட அணி எது?
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்
22ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இந்த ஆட்டங்கள் நவி மும்பை, லக்னோ மற்றும் ராய்ப்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும். ஒவ்வொரு அணியிலும் தரம்வாய்நத வீரர்கள் இருப்பதால் இந்த தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
மேலும் சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், பிரையன் லாரா, குமார் சங்கக்காரா, ஷேன் வாட்சன் ஆகிய ஜாம்பவான்களின் ஆட்டத்தை காண 90 கிட்ஸ்கள் ரெடியாக இருக்கின்றனர். இந்திய அணியில் புகழ்பெற்ற வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, இர்பான் பதான் ஆகியோர் உள்ளனர். சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணி வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.
இந்திய அணி
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடருக்கான இந்திய அணி: சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, யூசுப் பதான், இர்பான் பதான், ஸ்டூவர்ட் பின்னி, தவால் குல்கர்னி, வினய் குமார், ஷாபாஸ் நதீம், ராகுல் சர்மா, நமன் ஓஜா, பவான் நெகி, குர்கீரத் சிங் மான் மற்றும் அபிமன்யு மிதுன்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடருக்கான இலங்கை அணி:குமார் சங்கக்கார (கேப்டன்), ரமேஷ் கலுவிதாரண, அஷான் பிரியஞ்சன், உபுல் தரங்கா, நுவன் பிரதீப், லஹிரு திரிமான்னே, சிந்தக ஜயசிங்க, சீக்குகே பிரசன்ன, ஜீவன் மென்டிஸ், இசுசு உதானா, தாமிகா பிரசாத், சுரங்கா லக்மல், தில்ருவான் பெரேரோ, அசலா குணரத்னே மற்றும் சதுரங்க டீ செல்வா.
சாம்பியன்ஸ் டிராபியில் பரிசு மழை; அடேங்கப்பா! முதல் பரிசு இத்தனை கோடியா?