WPL 2025: மகளிர் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி -குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்!
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

WPL 2025: மகளிர் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி -குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்!
இந்தியாவில் ஆண்களுக்கான ஐபிஎல் போன்று வீராங்கனைகளுக்கு Women's Premier League என்ற பெயரில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. பெண்கள் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகள் விளையாடுகின்றன.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடர் இன்று (பிப்ரவரி 14) தொடங்குகிறது. வதோதராவில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆர்சிபி அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் ஆகியோரும், குஜராத் அணியில் டியாண்ட்ரா டாட்டின், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோரும் கவனிக்கப்படும் வீராங்கனைகளாக உள்ளனர்.
மகளிர் ஐபிஎல்
வதோரா மைதானத்தை பொறுத்தவரை கடைசி ஆறு மகளிர் ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணி 150 ரன்கள் எடுத்திருப்பது ஒரே ஒரு முறைதான். வேகப்பந்து வீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்களும் இந்த மைதானத்தில் ஒரே எண்ணிக்கையிலான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆகையால் இந்த பிட்ச் பாஸ்ட், ஸ்பின் என இரண்டுக்கும் ஒத்துழைக்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதும் முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. Sports18 நெட்வொர்க் சேனலில் இந்த போட்டிகளை நேரலையில் பார்க்கலாம். ஜியோ சினிமா செயலியிலும் இந்த போட்டிகளை கண்டு ரசிக்கலாம். இப்போது இரண்டு அணி வீராங்கனைகளையும் பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி பிப்.19ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் யார் மோதல்? இந்தியா-பாக். மேட்ச் எப்போது?
ஆர்சிபி -குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள்
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வீராங்கனைகள்: ஆஷ்லே கார்ட்னர் (கேப்டன்), ஹர்லீன் தியோல், பிரகாஷிகா நாயக், பெத் மூனி, காஷ்வீ கெளதம், பிரியா மிஸ்ரா, பார்தி ஃபுல்மாலி, லாரா வால்வார்ட், சயாலி சாட்சார், டேனியல் கிப்சன், மன்னத் காஷ்யப், ஷப்னம் ஷகில், தயாளன் ஹேமலதா, டி சிம்பீல்ட், மேக்னா சிங், மேக்னா சிங் மற்றும் தனுஜா கன்வர்.
ஆர்சிபி அணி வீராங்கனைகள்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஆஷா சோபனா ஜாய், ஜோஷிதா விஜே, ரிச்சா கோஷ், டேனி வியாட், கனிகா அஹுஜா, சபினேனி மேகனா, ஏக்தா பிஷ்ட், கேட் கிராஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், எலிஸ் பெர்ரி, பிரேமா ராவத், ஜார்ஜியா பாஹம், ரேணுகா சிங் மற்றும் சோஃபி மோலினக்ஸ்.
மகளிர் ஐபிஎல் போட்டி
இந்த ஆண்டு மகளிர் ஐபிஎல் போட்டி வதோதராவில் தொடங்கி பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை என நான்கு இடங்களில் நடைபெறுகிறது. டெல்லியில் எந்த போட்டிகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் மனைவிகளுடன் செல்ல தடை? பிசிசிஐ அதிரடி!