- Home
- Sports
- சாம்பியன்ஸ் டிராபி பிப்.19ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் யார் மோதல்? இந்தியா-பாக். மேட்ச் எப்போது?
சாம்பியன்ஸ் டிராபி பிப்.19ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் யார் மோதல்? இந்தியா-பாக். மேட்ச் எப்போது?
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் மோதப்போவது எந்த அணிகள்? இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாம்பியன்ஸ் டிராபி பிப்.19ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் யார் மோதல்? இந்தியா-பாக். மேட்ச் எப்போது?
'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில் இந்தியா அங்கு செல்ல மறுத்து விட்டதால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும்.
இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி
சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும் பிப்ரவரி 19ம் தேதி நியூசிலாந்தும், பாகிஸ்தான் அணிகளும் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20ம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 4 ம்தேதி முதல் அரையிறுதி போட்டி நடக்கிறது. மார்ச் 5ம் தேதி 2வது அரையிறுதி போட்டி நடக்கிறது. மார்ச் 9ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
மதுபான தொழிலில் யுவராஜ் சிங்! சஞ்சய் தத் போல் 45 நாளில் ரூ.15 கோடி சம்பாதிக்க இலக்கு!
இந்திய அணி
இந்தியா மோதும் போட்டிகள் தவிர மற்ற அணிகளின் ஆட்டங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் நடக்கும்.இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெற்றிருந்த ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகி விட்டார். இதனால் அவருக்கு பதிலாக ஹர்சித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தியும் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி: ரோகி சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா.
இந்திய அணி விளையாடும் போட்டிகள்
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை:
பிப்ரவரி 20: வங்கதேசம் vs இந்தியா (துபாய்)
பிப்ரவரி 23: பாகிஸ்தான் vs இந்தியா (துபாய்)
மார்ச் 2: நியூசிலாந்து vs இந்தியா (துபாய்)
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். போட்டி தொடங்கும் அரை மணி நேரத்துக்கு முன்னதாக டாஸ் போடப்படும். சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசிக்கலாம்.
சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை! ஐபிஎல் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!