மதுபான தொழிலில் யுவராஜ் சிங்! சஞ்சய் தத் போல் 45 நாளில் ரூ.15 கோடி சம்பாதிக்க இலக்கு!
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நடிகர் சஞ்சய் தத் போன்று மதுபான தொழிலில் களமிறங்கியுள்ளார். சஞ்சய் தத் போன்று 45 நாளில் ரூ.15 கோடி சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ளார்.

மதுபான தொழிலில் யுவராஜ் சிங்! சஞ்சய் தத் போல் 45 நாளில் ரூ.15 கோடி சம்பாதிக்க இலக்கு!
பாலிவுட் நடிகர்களாக இருந்தாலும் சரி, கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் சரி அவர்களில் பலர் தங்கள் வருமான ஆதாரங்களை பன்முகப்படுத்த வணிக உலகில் காலடி எடுத்து வைத்துள்ளனர். பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் சஞ்சய் தத் நடிப்பு மட்டுமின்றி வணிகத்திலும் இறங்கியுள்ளார். அதில் பெரும் லாபத்தை ஈட்டி வருகிறார்.
சஞ்சய் தத் மதுபான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சஞ்சய் தத்தின் ஸ்காட்ச் விஸ்கி பிராண்டான 'தி க்ளென்வாக்' சந்தையில் பெரும் பிரபலமான பிராண்டாக உள்ளது. டிசம்பர் 2024ல் தொடங்கப்பட்ட இந்த பிராண்ட், வெறும் 45 நாட்களில் ரூ.15 கோடிக்கு மேல் சம்பாதித்தது. குறுகிய காலத்திற்குள் 200 மில்லி அளவு கொண்ட 3 லட்சம் விஸ்கி பாட்டில்கள் விற்றுத்தீர்ந்தன. ஒரு பாட்டிலின் விலை ரூ.500 ஆகும்.
சஞ்சய் தத்
நடிகர் சஞ்சய் தத் கார்டெல் & பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'தி க்ளென்வாக்' ஸ்காட்ச் விஸ்கி பிராண்டை அறிமுகம் செய்தார். க்ளென்வாக் என்பது ஸ்காட்லாந்தில் ஓக் பீப்பாய்களில் பழமையாக்கப்பட்ட மால்ட் மற்றும் தானிய விஸ்கிகளின் கலவையாகும். க்ளென்வாக் ஸ்காட்டிஷ் தண்ணீரில் ஸ்காட்டிஷ் தயாரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்படுகிறது.
இநத 'தி க்ளென்வாக்' பிராண்ட் தற்போது மகாராஷ்டிராவில் விற்கப்படுகிறது. விற்பனையில் சக்கைபோடு போட்டு வரும் இந்த பிராண்ட் சஞ்சய் தத்தின் வருமானத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த பிராண்ட் விற்பனையை 500% அதிகரிக்கவும், மேலும் இந்தியாவில் 18க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் ஐந்து நாடுகளுக்குள் இந்த விஸ்கி பிராண்டை அறிமுகம் செய்ய சஞ்சய் தத் திட்டமிட்டுள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை! ஐபிஎல் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!
யுவராஜ் சிங்
சஞ்சய் தத் மதுபான தொழிலில் கொடிகட்டி பறக்கும் நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் மதுபான வணிகத்தில் நுழைந்துள்ளார். யுவராஜ் சிங் அண்மையில் அல்ட்ரா-பிரீமியம் பிரிவை இலக்காகக் கொண்டு ஃபினோ FINOஎன்ற தனது பிரீமியம் டெக்கீலா மதுபான பிராண்டை அறிமுகப்படுத்தினார்.
ஃபினோ அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. 'ஃபினோ தான் நம்பும் அனைத்தையும் கொண்டுள்ளது' என்று யுவராஜ் சிங் இதன் அறிமுக விழாவில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
மதுபான தொழிலில் யுவராஜ் சிங்
ஃபினோ பிராண்ட் தற்போது அமெரிக்க சந்தையில் கிடைக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இந்திய சந்தையில் இந்த பிராண்டை அறிமுகப்படுத்த யுவராஜ் சிங் திட்டமிட்டுள்ளார். ஃபினோ பிராண்ட் மூலம் சஞ்சய் தத்தின் 45 நாட்களில் ரூ.15 கோடி வருமானத்தை முறியடிக்க யுவராஜ் சிங் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
பாலிவுட்டில் சஞ்சய் தத் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு முன்பே வில்லன் நடிகர் டேனி டென்சோங்பா மதுபான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் இந்தியாவின் மூன்றாவது பெரிய பீர் பிராண்டான 'யூக்சம் ப்ரூவரீஸ்' என்ற பிராண்டை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் மனைவிகளுடன் செல்ல தடை? பிசிசிஐ அதிரடி!