PBKS vs LSG: ருத்ரதாண்டவமாடிய பிரப்சிம்ரன் சிங்! லக்னோவை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IPL: Punjab Kings beat Lucknow Super Giants: ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோவில் நடந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தங்கள் அணி முதலில் பந்துவீசும் என தெரிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. நிகோலஸ் பூரன் அதிகபட்சமாக 30 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். ஆயுஷ் பதோனி 33 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்.
IPL, Punjab Kings, Lucknow Super Giants
கேப்டன் ரிஷப் பண்ட் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து மேக்ஸ்வெல்லின் சாதாரண பந்தில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்பு 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 9 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 34 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அசத்தினார்.
ஓசி டிக்கெட் கேட்டு மிரட்டல்! ஹைதராபாத்திலிருந்து வெளியேறும் SRH? களமிறங்கிய ரேவந்த் ரெட்டி!
IPL, Cricket
நெஹால் வதேரா 25 பந்துகளில் 43 ரன்கள் அடித்தும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 30 பந்தில் 52 ரன்கள் அடித்தும் நாட் அவுட்டாக திகழ்ந்தனர். பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார். லக்னோ தரப்பில் திக்வேஷ் ரதி 2 விக்கெட் வீழ்த்தினார். பஞ்சாப் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 3 போட்டியில் விளையாடியுள்ள லக்னோவுக்கு இது 2வது தோல்வியாகும்.
IPL 2025 , Sports News in Tamil,
இந்த ஆட்டத்துக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ''எங்களுக்குத் தேவையான நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் திறனுக்கு ஏற்றவாறு அணிக்கு பங்களிப்பு செய்கிறார்கள். நாங்கள் என்ன திட்டமிட்டாலும், அதை அவர்கள் முழுமையாகச் செய்தார்கள். அனைத்து அணிகளுக்கும் ஆட்டத்தை வெல்லும் திறன் உள்ளது, வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே மாதிரியான மனநிலையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும் - அதைப் பற்றித்தான் நாங்கள் எப்போதும் பேசுகிறோம். நான் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்க முயற்சிக்கிறேன், இந்த இன்னிங்ஸ் எனக்கு வரலாறு, இப்போது அடுத்த இன்னிங்ஸில் கவனம் செலுத்த விரும்புகிறேன்'' என்றார்.
Dream 11: கோடி கோடியாக கல்லா கட்டும் 'ட்ரீம் 11' உரிமையாளர் யார்? சொத்து மதிப்பு என்ன?