- Home
- Sports
- ஓசி டிக்கெட் கேட்டு மிரட்டல்! ஹைதராபாத்திலிருந்து வெளியேறும் SRH? களமிறங்கிய ரேவந்த் ரெட்டி!
ஓசி டிக்கெட் கேட்டு மிரட்டல்! ஹைதராபாத்திலிருந்து வெளியேறும் SRH? களமிறங்கிய ரேவந்த் ரெட்டி!
HCA மீது குற்றம்சாட்டி ஹைதராபாத்தில் இருந்து வெளியேறுவதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தெரிவித்துள்ளதால், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

IPL: SRH out of Hyderabad?: ஐபிஎல் 2025 சீசன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் (HCA) இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ஓசி டிக்கெட் கேட்டு மிரட்டி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் ஹைதராபாத் மைதானத்தை விட்டு வெளியேறி விடுவோம் என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தெரிவித்து இருந்தது.
Team Sunrisers Hyderabad
எச்.சி.ஏ தலைவர் ஜெகன்மோகன் ராவ் பாஸ்களுக்காக தங்களை கடுமையாக துன்புறுத்துவதாக சன்ரைசர்ஸ் நிர்வாகம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது.HCA தவறாக நடந்துகொண்டதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் SRH நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. அதே வேளையில் ஹைதராபாத் அணியின் குற்றச்சாட்டுகளை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் பொது மேலாளர் டி.பி.ஸ்ரீநாத், எச்.சி.ஏ பொருளாளர் சி.ஜே.ஸ்ரீனிவாஸ் ராவுக்கு காரசாரமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். எச்.சி.ஏ அதிகாரிகள், குறிப்பாக தலைவர் ஏ.ஜெகன்மோகன் ராவ், இலவச பாஸ்களுக்காக தொல்லை தருவது தீவிரமடைந்துள்ளது. இதுபோன்ற நடத்தையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று டி.பி.ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
Dream 11: கோடி கோடியாக கல்லா கட்டும் 'ட்ரீம் 11' உரிமையாளர் யார்? சொத்து மதிப்பு என்ன?
IPL, SRH, Cricket
கடந்த இரண்டு பருவங்களாக HCA தனது ஊழியர்களுக்கு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விஷயத்தை HCA வின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் கூறினார். HCAவின் நடத்தையைப் பார்க்கும்போது, SRH இந்த ஸ்டேடியத்தில் விளையாடக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பதாகத் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது உண்மையாக இருந்தால், பிசிசிஐ, தெலுங்கானா அரசு மற்றும் எங்கள் நிர்வாகத்துடன் விவாதித்து ஹைதராபாத்தை விட்டு வெளியேறி புதிய இடத்தைத் தேடுவோம் என்றும் எஸ்ஆர்எச் பொது மேலாளர் (விளையாட்டு) ஸ்ரீநாத் எச்சரித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக எச்.சி.ஏ.யுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கடந்த சீசனில் இருந்து தான் இந்த பிரச்சனைகளையும், தொல்லைகளையும் சந்தித்து வருகிறோம் என்றார்.
மேலும் SRH பொது மேலாளர் (விளையாட்டு) ஸ்ரீநாத் ஒரு அறிக்கையில், முன்பு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு சீசனிலும் அவர்களுக்கு 50 இலவச டிக்கெட்டுகள் (F12A பெட்டி) வழங்கப்படுகின்றன.
Telangana Chief Minister Revanth Reddy
ஹைதராபாத்தில் இருந்து சன்ரைசர்ஸ் அணி வெளியேறுகிறது என்ற தகவல் வெளியானதையடுத்து ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த இந்த சர்ச்சையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கவனம் செலுத்தியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகத்தை எச்.சி.ஏ மிரட்டுவதாக வெளியான செய்தி குறித்து விசாரணை நடத்த முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநர் ஜெனரல் கே.ஸ்ரீனிவாஸ் ரெட்டிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கிரிக்கெட் போட்டிகளுக்கான பாஸ் கேட்டு எஸ்ஆர்எச் நிர்வாகத்திற்கு யாராவது பிரச்சனைகளை ஏற்படுத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரேவந்த் ரெட்டி எச்சரித்துள்ளார்.
அறிமுக போட்டியிலேயே மும்பைக்கு உயிர்கொடுத்த இளம் வீரர்! யார் இந்த அஸ்வனி குமார்?