MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • அறிமுக போட்டியிலேயே மும்பைக்கு உயிர்கொடுத்த இளம் வீரர்! யார் இந்த அஸ்வனி குமார்?

அறிமுக போட்டியிலேயே மும்பைக்கு உயிர்கொடுத்த இளம் வீரர்! யார் இந்த அஸ்வனி குமார்?

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுக போட்டியில் களம் கண்ட அஸ்வனி குமார் 4 விக்கெட் வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இவர் யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
| Updated : Apr 01 2025, 01:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

IPL: Who is Ashwani Kumar: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.2 ஓவர்களில் வெறும் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு பேட்டிங் செய்த மும்பை அணி 12.5 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Mumbai Indians, Ashwani Kumar

Mumbai Indians, Ashwani Kumar

இந்த போட்டியின் மூலம் ஐபிஎல்லில் அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் வீரர் அஸ்வனி குமார் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்தார். 23 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான அஸ்வனி குமார் முதல் போட்டியிலேயே அஜிங்யா ரஹானே, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல் மற்றும் மணிஷ் பாண்டே என உலகத்தரம் வாய்ந்த வீரர்களை அவுட்டாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். அஸ்வனி குமார் பஞ்சாப் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 

2022 ஆம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி டிராபியுடன் தனது உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். விஜய் ஹசாரே டிராபியிலும் பஞ்சாப் அணிக்காக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது தவிர முதல்தர கிரிக்கெட்டின் சில போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். ஷெர்-இ-பஞ்சாப் டி20 உள்நாட்டு கிரிக்கெட்டில்  BLB பிளாஸ்டர்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அஸ்வனி குமாரின் திறமை வெளியுலகத்துக்கு தெரியவந்தது.

KKR கதையை முடித்த அறிமுக வீரர் அஸ்வனி குமார்! மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி!

 

34
Who is the Ashwani Kumar

Who is the Ashwani Kumar

அஸ்வனி குமார் டெத் ஓவர்களில் மிகவும் சிறப்பாக செயல்படக்கூடியவர். பஞ்சாபில் இவர் யார்க்கர் கிங் என்றும் அழைக்கப்படுகிறார். உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான யார்க்கர் பந்துவீச்சின் மூலம் பலரை காலி செய்துள்ளார். முதல் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி அஸ்வனி குமார் தனது ஐபிஎல் அறிமுக போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி பெரிய சாதனை படைத்தார். முதல் பந்திலேயே கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவை அவுட்டாக்கினார். 

44
IPL 2025, KKR vs MI

IPL 2025, KKR vs MI

இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப், டேவெல்ட் ப்ரூவிஸ், அலி மோர்டாசா ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். முதல் போட்டியிலேயே அசத்தியுள்ளதால் அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வனி குமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 25 வயதான கேரளாவை சேர்ந்த விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தோனியால் 10 ஓவர் பேட்டிங் ஆட முடியாது! அப்படினா 'இது' மட்டும் எப்படி? ரசிகர்கள் கேள்வி!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
ஐபிஎல் 2025
மும்பை இந்தியன்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image2
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved