CSK vs LSG: சாட்டையை கையில் எடுத்த தோனி! 3 வீரர்கள் நீக்கம்! சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!
சிஎஸ்கே அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 14ம் தேதி விளையாட உள்ள நிலையில், பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகிறது. 3 வீரர்கள் நீக்கப்படுகின்றனர்.

IPL: CSK playing eleven against LSG: ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்பு விளையாடிய சிஎஸ்கே 10.1 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிஎஸ்கேவின் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் சொதப்பியதே படுமோசமான தோல்விக்கு காரணமாகும்.
CSK vs LSG, IPL
சிஎஸ்கே தொடர் தோல்வி
சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்து வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று 9வது இடத்தில் இருக்கிறது. மீதமிருக்கும் 8 போட்டிகளில் 7ல் வென்றால் தான் சிஎஸ்கே இனி பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும். சிஎஸ்கே அணி தனது அடுத்த போட்டியில் வரும் 14ம் தேதி (திங்கட்கிழமை) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனி அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது இரண்டு அல்லது 3 வீரர்கள் சிஎஸ்கேவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட உள்ளனர். பல கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை அணிக்காக ஏதும் செய்யவில்லை. பவர்பிளேயில் ரன்களை வாரி வழங்குகிறார். இதனால் அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என உறுதியாகியுள்ளது.
காலங்கள் மாறுது! காட்சிகள் மாறுது! மிக மோசமான சாதனை படைத்த சிஎஸ்கே கேப்டன் தோனி!
MS Dhoni, Cricket
தோனியின் அதிரடி முடிவு
மேலும் இந்த சீசனில் சிஎஸ்கேவின் மோசமான தேர்வுகளில் ஒன்று ராகுல் திரிபாதி. அதிரடியாக ஆட முடியாமல் தடுமாறுவது மட்டுமின்றி ரன்களை அடிக்கவே ராகுல் திரிபாதி தடுமாறுகிறார். முதல் 4 போட்டிகளில் சொதப்பியதால் 5வது போட்டியில் அணியில் இவர் இடம்பெறவில்லை. ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக நேற்றைய போட்டியில் ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சுத்தமாக ரன் அடிக்காமல் ஏன் எடுத்தோம் என சிஎஸ்கே நிர்வாகத்தை அவர் நினைக்க வைத்து விட்டார். ராகுல் திரிபாதியும் அடுத்த மேட்ச்சில் நீக்கப்படுகிறார்.
அடுத்ததாக சிஎஸ்கே நம்பி எடுத்த தீபக் ஹூடா தொடர்ந்து மோசமாக பேட்டிங் செய்து வருகிறார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால் மதிஷா பதிரனாவை வெளியே உட்கார வைத்து விட்டு தீபக் ஹூடா இம்பேக்ட் வீரராக உள்ளே வந்தார். ஆனால் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேறினார் தீபக் ஹூடா. இவரையும் அணியில் இருந்து அதிரடியாக நீக்க தோனி முடிவு செய்துள்ளார்.
CSK Playing 11
சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன்
இவர்களுக்கு பதிலாக ஆண்ட்ரே சித்தார்த் அணியில் எடுக்கப்பட உள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரச்சின் ரவிந்திரா, டெவான் கான்வே ஒப்பனிங்கில் களமிறங்குகின்றனர். இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்ததாக விஜய் சங்கர் களமிறங்குகிறார். இவரை தொடர்ந்து இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் களம் காண்கிறார். மிடில் வரிசையில் இளம் வீரர் ஷேக் ரஷித், ஷிவம் துபே விளையாடுகின்றனர். பின்வரிசையில் ஜடேஜா, தோனி பேட்டிங் செய்ய உள்ளனர்.
பவுலிங்கை பொறுத்தவரை அன்ஷுல் காம்போஜ், பதிரனா, கலீல் அகமது பாஸ்ட் பவுலிங்கிலும், நூர் அகமது, ஜடேஜா, தேவைப்பட்டால் ரச்சின் ரவீந்திரா ஸ்பின் பவுலிங்கிலும் வலு சேர்க்க உள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பிளேயிங் லெவன்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, விஜய் சங்கர், ஆண்ட்ரே சித்தார்த், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் காம்போஜ், மதிஷா பதிரனா, கலீல் அகமது, நூர் அகமது.
CSK vs KKR: தோனி தலைமையில் சிஎஸ்கே படுதோல்வி! அசால்ட்டாக ஊதித்தள்ளிய கொல்கத்தா!