காலங்கள் மாறுது! காட்சிகள் மாறுது! மிக மோசமான சாதனை படைத்த சிஎஸ்கே கேப்டன் தோனி!
மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இல்லாத அளவு மோசமான சாதனையை படைத்துள்ளது.

CSK Dhoni has a poor record in IPL cricket: ஐபிஎல் கிரிக்கெட்டின் லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அனைவரும் படுமோசமாக விளையாடினார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்பின்னர்கள் 3 விக்கெட், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் என சுழல் வலையில் சிஎஸ்கே வீரர்கள் சிக்கினார்கள்.
MS Dhoni, CSK, IPL
பின்பு எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வெறும் 10.1 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 விக்கெட்டும், 44 ரன்களும் விளாசிய சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்து வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று 9வது இடத்தில் இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்ற சிஎஸ்கே அதன்பிறகு நடந்த அனைத்து ஆட்டங்களிலும் மோசமான தோல்வியை தழுவியுள்ளது. நேற்றைய போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் ஏதோ கடமைக்கு விளையாடுவது போல் மந்தமாக இருந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சிஎஸ்கேவுக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த தோனி வந்தால் எல்லாம் மாறி விடும் என ரசிகர்கள் நினைத்தனர்.
CSK vs KKR: தோனி கேப்டனாக வந்தார்! வெறும் 103 ரன்களில் அடங்கிய சிஎஸ்கே! படுமோசமான பேட்டிங்!
MS Dhoni, Cricket
ஆனால் தோனி மீண்டும் கேப்டனான முதல் ஆட்டத்திலேயே சிஎஸ்கே 103 ரன்கள் என்ற குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே இவ்வளவு குறைந்த ஸ்கோரைப் பெறுவது இதுவே முதல் முறை. இதுவும் தோனியின் தலைமையின் கீழ் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தோனி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.
CSK Captain Dhoni Batting
மேலும் நேற்றைய போட்டியில் தோனியின் பேட்டிங்கும் படுமோசமாக இருந்தது. ரசிகர்களின் வழக்கமான ஆரவாரத்துக்கு களம்புகுந்த தோனி அணியை காப்பாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், வெறும் 1 ரன்னில் சுனில் நரைன் பந்தில் அவர் எல்பிடபிள்யூ ஆனார். தோனி ஸ்பின்னர்களுக்கு எதிரக தடுமாறி வருவது நேற்று அப்பட்டமாக தெரிந்தது. சிஎஸ்கேவின் பேட்டிங், பீல்டிங் மிக மோசமாக உள்ளது. பவுலிங்கும் எதிர்பார்த்த அளவு இல்லை. இனிவரும் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு செல்வது குறித்து நினைத்து பார்க்க முடியும்.
CSK vs KKR: தோனி தலைமையில் சிஎஸ்கே படுதோல்வி! அசால்ட்டாக ஊதித்தள்ளிய கொல்கத்தா!