CSK vs KKR: தோனி தலைமையில் சிஎஸ்கே படுதோல்வி! அசால்ட்டாக ஊதித்தள்ளிய கொல்கத்தா!
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி தலைமையில் களமிறங்கிய சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்துள்ளது.

IPL: Kolkata Knight Riders beat chennai super kings: ஐபிஎல் கிரிக்கெட்டின் 25வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்யே ரஹானே தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
CSK vs KKR, Cricket
சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அனைவரும் கடுமையாக சொதப்பினார்கள். முக்கிய பேட்ஸ்மேன்கள் டேவான் கான்வே (12 ரன்), ரச்சின் ரவீந்திரா (4), ரவீந்திர ஜடேஜா (0), தோனி (1) என அனைவரும் படுமோசமாக விளையாடினார்கள். ஷிவம் துபே ஓரளவு தாக்குப்பிடித்து 31 ரன்கள் அடித்தார். விஜய் சங்கர் 29 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பின்பு எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. விரைவாக மேட்சை முடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினார்கள். தொடக்க வீரர் குயின்டன் டி காக் 16 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுபக்கம் சிக்சர் மழை பொழிந்த சுனில் நரைன் வெறும் 18 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 44 ரன் அடித்து நூர் அகமது பந்தில் போல்டானார்.
CSK vs KKR: தோனி கேப்டனாக வந்தார்! வெறும் 103 ரன்களில் அடங்கிய சிஎஸ்கே! படுமோசமான பேட்டிங்!
IPL 2025, MS Dhoni
இதன்பிறகு அஜிங்யே ரஹானே (20 ரன்), ரிங்கு சிங் (15) சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெறும் 10.1 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 விக்கெட்டும், 44 ரன்களும் விளாசிய சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 6வது போட்டியில் விளையாடும் கொல்கத்தா அணிக்கு இது 3வது வெற்றியாகும். அந்த அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
Kolkata Knight Riders vs Chennai Super Kings
அதே வேளையில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்து வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று 9வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டியில் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் தொடக்கத்தில் இருந்து தடுமாறிய சிஎஸ்கேவால் பேட்டிங், பவுலிங் என எதிலும் மீள முடியவில்லை.
ரூ.110 கோடி ஒப்பந்தம்! பூமா உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார் விராட் கோலி