ஐபிஎல் 2025 அட்டவணை: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக்! முதல் ஆட்டத்தில் எந்த அணிகள் மோதல்?
ஐபிஎல் 2025 சீசன் போட்டிகள் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் போட்டி மார்ச் 22ம் தேதி தொடங்க இருக்கிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

ஐபிஎல் 2025 அட்டவணை: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக்! முதல் ஆட்டத்தில் எந்த அணிகள் மோதல்?
இந்தியாவில் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் சிக்சர்கள் மழை, அடுத்தடுத்து விக்கெட் என பரபரப்பாக செல்வதால் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் தொடர்களை பார்த்து வருகின்றனர். 2025 ஐபிஎல் தொடருக்காக இப்போதே எதிர்பார்ப்பு தொடங்கியுள்ள நிலையில் ஐபிஎல் 2025 அட்டவணை தொடர்பாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2025 ஐபிஎல் சீசன் மார்ச் 22ம் தேதி தொடங்கி மே 25 அன்று இறுதி போட்டியுடன் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் மார்ச் 22 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருப்பதாகவும், மார்ச் 23ம் தேதி இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.
ஐபிஎல் 2025
முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கைப்பற்றிய நிலையில், அந்த அணிக்கு முதல் போட்டி ஒதுகப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல்லின் தொடக்க போட்டிகளில் சிஎஸ்கே அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடும். இந்த இரண்டு அணிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் முதல் போட்டியே பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கபட்டு இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி பிப்.19ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் யார் மோதல்? இந்தியா-பாக். மேட்ச் எப்போது?
ஐபிஎல் 2025 அட்டவணை
ஆனால் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. முதல் போட்டியில் சிஎஸ்கே விளையாடும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், பிசிசிஐ அவர்களுக்கு அதிர்ச்சி அளித்து இருக்கிறது. ஐபிஎல் 2025 சீசனின் முதல் குவாலிஃபயர் போட்டியும், எலிமினேட்டர் போட்டியும் ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெறும்.
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி
ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இந்த ஆண்டு வழக்கமாக உள்ள மைதானங்களுடன் கூடுதலாக கவுகாத்தி மற்றும் தரம்சாலாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. கவுகாத்தியில் இரண்டு போட்டிகளும், தரம்சாலாவில் மூன்று போட்டிகளும் நடைபெற உள்ளன.
WPL 2025: மகளிர் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி -குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்!