IND vs ENG ODI: ஓடிஐ தொடர் அட்டவணை; போட்டிகள் தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருக்கான அட்டவணை, எந்த டிவியில் பார்க்கலாம்? என்பது உள்ளிட்ட முழு விவரங்களை பார்ப்போம்.

IND vs ENG ODI: ஓடிஐ தொடர் அட்டவணை; போட்டிகள் தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்திய அணி இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக இந்தியா-இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி பிப்ரவரி 6ம் தேதி நாக்பூரில் நடைபெற இருக்கிறது. 2வது ஓடிஐ பிப்ரவரி 9ம் தேதி கட்டாக்கிலும், 3வது ஓடிஐ பிப்ரவரி 12ம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளன.
'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னால் நடைபெறுவதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. ஏனெனில் ஓடிஐ தொடரை கைப்பற்றினால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை உற்சாகத்துடன் எதிர்கொள்ள வழிவகுக்கும். இந்திய அணியை பொறுத்தவரை டி20 அணியில் இருந்து ஓடிஐ அணி முற்றிலுமாக மாறுபடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து ஓடிஐ
கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இந்திய அணியில் களம் காண்கின்றனர். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து தொடரின் மூலம் ஓடிஐ கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயருக்கு கம்பேக் கொடுகக் இந்த தொடர் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதேபோல் தங்கள் மீதான விமர்சனத்தை களைய இந்த தொடர் மூலம் வீராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு அருமையான வாய்ப்பு கணிந்துள்ளது. பவுலிங்கை பொறுத்தவரை தன்னுடைய உடற்தகுதியை சோதனை செய்ய முகமது ஷமிக்கு ஓடிஐ தொடர் பொருத்தமாக இருக்கும். இதேபோல் குல்தீப் யாதவ்வும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் களம் காண்கிறார்.
சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? தனக்குத் தானே 'ஆப்பு'; வெளியான தகவல்!
இந்தியா-இங்கிலாந்து ஓடிஐ தொடர்
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை டி20 தொடரின் தோல்வியை மறந்து விட்டு ஓடிஐ தொடரை வெல்ல முயற்சிக்கும். 'ரன் மெஷின்' ஜோ ரூட் ஓடிஐ அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பெரும் பலம் சேர்க்கும். மற்றபடி டி20 தொடரில் விளையாடிய வீரர்கள் அப்படியே ஓடிஐ தொடரிலும் விளையாடுகின்றனர். இந்தியா-இங்கிலாந்து ஓடிஐ தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி நண்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். அரை மணி நேரத்துக்கு முன்னதாக அதாவது நண்பகல் 1 மணிக்கு டாஸ் போடப்படும்.
ஓடிஐ தொடர் முழுவதையும் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் தமிழ் வர்ணனையுடன் பார்க்கலாம். மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் போட்டியை கண்டு ரசிக்கலாம். இதேபோல் DD Free Dish இன் DD Sports சேனலிலும் போட்டிகள் ஒளிபரப்பாகும். இந்த ஓடிஐ தொடரில் பங்கேற்கும் இரண்டு அணி வீரர்களையும் இப்போது பார்க்கலாம்.
இந்தியா-இங்கிலாந்து
ஓடிஐ தொடருக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா.
ஓடிஐ தொடருக்கான இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்சி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஜோ ரூட், சாகிப் மஹ்மூத், பில் சால்ட் மற்றும் மார்க் வுட்.
இங்கிலாந்து கிரிக்கெட்டிலும் கால் பதித்த முகேஷ் அம்பானி; ரூ.645 கோடிக்கு புதிய அணி!