சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? தனக்குத் தானே 'ஆப்பு'; வெளியான தகவல்!
இங்கிலாந்து தொடர் முழுவதும் சொதப்பிய சஞ்சு சாம்சனின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? என்பது குறித்த விரிவான தகவலை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? தனக்குத் தானே 'ஆப்பு'; வெளியான தகவல்!
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த தொடரில் இந்தியாவின் பவுலிங் அட்டகாசமாக இருந்தாலும், பல வீரர்களின் பேட்டிங் சுத்தமாக சரியில்லை என்ற உண்மையை சொல்லியே ஆக வேண்டும்.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மட்டும் தான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோரின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. 5 போட்டிகளிலும் சேர்த்து சூர்யகுமார் யாதவ் வெறும் 28 ரன்களே எடுத்தார். சஞ்சு சாம்சன் 5 போட்டிகளில் வெறும் 51 ரன்களே அடித்தார். இது மட்டுமின்றி ஆல்ரவுண்டர்கள் அக்சர் படேல் (5 போட்டியில் 37), வாஷிங்டன் சுந்தர் (32 ரன்) ஆகியோரும் சொதப்பினர்கள்.
சஞ்சு சாம்சன்
இதில் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் தப்பித்துக் கொள்வார். இதேபோல் அக்சர் படேலும், வாஷிங்டன் சுந்தரும் பேட்டிங் மட்டுமின்றி ஸ்பின் பவுலிங்கும் வீசுபவர்கள் என்பதால் அவர்களுக்கும் சிக்கல் இல்லை. ஆனால் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனின் எதிர்காலம் தான் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
சஞ்சு சாம்சன் இந்த தொடர் முழுவதும் ரன்கள் அடிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவர் அவுட் ஆன விதம் தான் பெரும் விமர்சனத்துக்குள்ளாக்கி இருக்கிறது. ஏனெனில் இந்த தொடர் முழுவதும் சஞ்சு சாம்சன் ஒரே மாதிரியாக ஷாட் பிட்ச் பந்தில் தான் அவுட்டாகியுள்ளார். முதலாவது போட்டியில் இருந்து ஐந்தாவது போட்டி வரை சொல்லிவைத்தாற் போல் இங்கிலாந்து பவுலர்கள் ஷாட் பால் போடுவதும் அவர் தவறான ஷாட் அடித்து பீல்டர்களின் கையில் பந்தை கொடுத்து விட்டு செல்வதும் நடந்தது.
D.Gukesh: 18 வயதில் கோடிகளில் புரளும் செஸ் சாம்பியன் குகேஷ்; சொத்து மதிப்பு என்ன?
சஞ்சு சாம்சன் பேட்டிங்
அதிலும் இந்த தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யாவிடம் மரண அடி வாங்கிய ஜோப்ரா ஆர்ச்சரின் பந்தில் சஞ்சு சாம்சன் மூன்று முறை விக்கெட் இழந்தது தான் வேதனையின் உச்சம். இந்த 5 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் கூட அவர் ஷாட்பிட்ச் பந்தில் தவறிழைப்பதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க ஏராளமான இளம் வீரர்கள் பிசிசிஐ கதவை தட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அதிசயமாக தொடர் முழுவதும் கிடைத்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் முழுமையாக கோட்டை விட்டுள்ளார். ஏற்கெனவே பிசிசிஐ அவரை டெஸ்ட் மற்றும் ஓடிஐகளில் ஓரம் கட்டி வருகிறது. இப்போது டி20 போட்டிகளிலும் அவர் படுமோசமாக சொதப்பி இருப்பதால் இனிமேல் இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே.
இந்தியா-இங்கிலாந்து டி20
சஞ்சு சாம்சன் விஜய் டிராபி தொடரில் விளையாடாமல் துபாயில் ஜாலியாக சுற்றித் திரிந்ததால் தான் அவரை இங்கிலாந்து ஓடிஐ தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் பிசிஐஐ சேர்க்கவில்லை என ஒருபக்கம் தகவல்கள் கசிந்துள்ளன. இப்போது டி20 தொடரில் முற்றிலுமாக சொதப்பி தனக்குத் தானே 'ஆப்பு' வைத்துக் கொண்டுள்ளார் இந்த கடவுளின் தேசத்தின் சேட்டன்.
ஏற்கெனவே இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல் என விக்கெட் கீப்பர்கள் குவிந்து கிடக்கின்றனர். இந்நிலையில் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டும் சஞ்சு சாம்சன் மோசமாக செயல்பட்டு அவரது இடத்துக்கு ஆப்பு வைத்துள்ளார். இவர் இன்னும் கொஞ்சகாலம் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவார். இந்திய அணியில் இடத்தை நினைத்து பார்க்க முடியாது என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கூற்றாக உள்ளது.
IND vs ENG 5th T20: ஒன்றா, இரண்டா 5 சாதனைகளை படைத்த அபிஷேக் சர்மா; செம மாஸ்!