MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • D.Gukesh: 18 வயதில் கோடிகளில் புரளும் செஸ் சாம்பியன் குகேஷ்; சொத்து மதிப்பு என்ன?

D.Gukesh: 18 வயதில் கோடிகளில் புரளும் செஸ் சாம்பியன் குகேஷ்; சொத்து மதிப்பு என்ன?

தமிழ்நாட்டை சேர்ந்த டி.குகேஷ், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். 18 வயதில் அவரது சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : Feb 03 2025, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
D.Gukesh: 18 வயதில் கோடிகளில் புரளும் செஸ் சாம்பியன் குகேஷ்; சொத்து மதிப்பு என்ன?

D.Gukesh: 18 வயதில் கோடிகளில் புரளும் செஸ் சாம்பியன் குகேஷ்; சொத்து மதிப்பு என்ன?

இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று சாதனை படைத்தார். உலக அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த 18 வயதான குகேஷுக்கு விளையாட்டின் உயர்ந்த விருதான 'கேல் ரத்னா' விருது வழங்கப்படுகிறது. 

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு குகேஷின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. குகேஷ் கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் அமெரிக்க அதிபரை விட 2 மடங்கு அதிகம் சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது, அதாவது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷிக்கு பரிசுத் தொகையாக 15,77,842 அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் 13.6 கோடி ரூபாய் ஆகும். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
உலக செஸ் சாம்பியன் குகேஷ்

உலக செஸ் சாம்பியன் குகேஷ்

இது தவிர குகேஷிக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. இது மட்டுமின்றி குகேஷ் படித்த வேலம்மாள் பள்ளியில் அவருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசாக வழங்கியிருந்தது. உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதற்காக குகேஷ் பெற்ற 15,77,842 டாலர்கள், அமெரிக்க அதிபரின் ஆண்டு வருமானத்தை விட அதிகமாகும். அமெரிக்க அதிபர் ஆண்டுக்கு 4,00,000 அமெரிக்க டாலர்களை வருமானமாக பெறுகிறார். 

இங்கிலாந்து கிரிக்கெட்டிலும் கால் பதித்த முகேஷ் அம்பானி; ரூ.645 கோடிக்கு புதிய அணி!

35
குகேஷ் சொத்து மதிப்பு என்ன?

குகேஷ் சொத்து மதிப்பு என்ன?

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கு முன்பு, குகேஷின் நிகர மதிப்பு சுமார் ரூ.8.26 கோடியாக இருந்தது. ஆனால் அவர் உலக செஸ் சாம்பியன் ஆன பிறகு இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதாவது ரூ.20 கோடி ஆக உயர்ந்துள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் அவர் வென்ற பரிசு அவரது வருமானத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் மட்டுமின்றி செஸ் ஒலிம்பியாட், டாடா ஸ்டீல் சதுரங்க போட்டி மற்றும் FIDE கிராண்ட் சுவிஸ் உள்ளிட்ட பிற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அங்கு அவர் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பரிசுத் தொகையையும் பெற்றார். இது அவரது வருமானம் மற்றும் நிகர மதிப்புக்கு கணிசமாக பங்களித்தது.

45
குகேஷ் பிராண்ட் ஒப்பந்தங்கள்

குகேஷ் பிராண்ட் ஒப்பந்தங்கள்

செஸ் போட்டிகளில் சம்பாதிப்பது மட்டுமின்றி குகேஷ் பிராண்ட் ஒப்புதல்கள் மூலமும் பணம் சம்பாதிக்கிறார். இவர் RBL வங்கி மற்றும் சொத்தின் பிராண்ட் அம்பாசிடர் ஆவார். மேலும் வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமியுடன் ஐந்து ஆண்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார். இது அவரது பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை கவனித்துக் கொள்ளும். 

அறிக்கைகளின்படி, குகேஷின் பிராண்ட் ஒப்புதல் மதிப்பு ரூ.60 லட்சம் என தகவல்கள் கூறுகின்றன. குகேஷின் வளர்ந்து வரும் புகழும் வெற்றியும் எதிர்காலத்தில் மேலும் பல்வேறு பிராண்ட் ஒப்புதல்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

55
இன்ஸ்டாகிராமில் குகேஷ்

இன்ஸ்டாகிராமில் குகேஷ்

செஸ் போட்டிகள் மற்றும் பிராண்ட் ஒப்புதல்கள் மூலம் சம்பாதிப்பதைத் தவிர, டி. குகேஷுக்கு அனைத்து சமூக ஊடக தளங்களிலும் பின்தொடர்பவர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில், அவருக்கு 2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, சாதனைகள் மற்றும் பிராண்ட் ஒத்துழைப்புகளின் ஒரு பார்வையையும் பகிர்ந்துள்ளார். ட்விட்டரில் குகேஷுக்கு கிட்டத்தட்ட 1,90,000 ரசிகர்கள் உள்ளனர். குகேஷுக்கு சொந்தமாக பேஸ்புக் இல்லை என்றாலும், அவரது பெயரில் பல பேஸ்புக் தளங்கள் செயல்படுகின்றன. 

IND vs ENG 5th T20: ஒன்றா, இரண்டா 5 சாதனைகளை படைத்த அபிஷேக் சர்மா; செம மாஸ்!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image2
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Recommended image3
IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved