சொன்னதை செய்த கம்மின்ஸ்; இந்திய அணி படுதோல்வி; மண்ணை கவ்வ இதுதான் காரணம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்த தொடர் 1 1 என சமநிலையாகியுள்ளது
India vs Australia 2nd Test
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது பிங் பால் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மிட்ச்செல் ஸ்டார்க் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முன்னணி வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிங்க் பாலில் கலக்கிய ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
India beat By Australia
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்தியாவுக்கு எப்போதும் தலைவலியாக இருக்கும் டிராவிஸ் ஹெட் 141 பந்தில் 140 ரன்கள் எடுத்து அதிரடி சதம் விளாசினார். இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய அணி இந்தியாவை விட 157 ரன்கள் முன்னிலை பெற்றது.
இக்கட்டான நிலையில் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்தியா கடுமையாக தடுமாறியது. ஜெய்ஸ்வால் (24), விராட் கோலி (11), தொடர்ந்து சொதப்பி வரும் கேப்டன் ரோகித் சர்மா (6), சுப்மன் கில் (28) என அடுத்தடுத்து அவுட் ஆக 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 128/5 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது.
'ஹெட் சொல்வது பச்சை பொய், நடந்தது இதுதான்'; உண்மையை போட்டுடைத்த சிராஜ்!
Travis head Hundred
அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும்விதமாக இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 28 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். தொடர்ந்து அஸ்வின் (7), ஹர்சித் ராணா (0), சிறிது நேரம் அதிரடி காட்டிய நிதிஷ் குமார் ரெட்டி (42) ஆகியோரை கம்மின்ஸ் வெளியேற்றினார். கடைசியில் சிராஜும் (7 ரன்) நடையை கட்ட இந்திய அணி 2வது இன்னிங்சில் 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் ஆஸ்திரேலியா வெற்றி பெற வெறும் 19 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், அந்த அணி அதை விக்கெட் இழப்பின்றி சுலபமாக எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருது வென்றர். முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலியா, இந்த வெற்றியின் மூலம் அதற்கு பழிதீர்த்துக் கொண்டது.
Ind vs Aus test series
முதல் டெஸ்ட்டில் தோல்விக்கு பிறகு பேசிய பாட் கம்மின்ஸ், ''2வது டெஸ்ட்டில் வலிமையாக மீண்டு வருவோம். இந்திய அணியை வீழ்த்துவோம்'' என்று கூறியிருந்தார். தற்போது அவர் சொன்னதை செய்து காட்டி விட்டார். அடிலெய்டு டெஸ்ட்டில் இந்திய அணியின் படுதோல்விக்கு முக்கியமான காரணங்கள் உள்ளன.
அதில் முதலாவது மிகவும் மோசமான பேட்டிங் தான். ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரின் சொதப்பலான பேட்டிங்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். டிபென்ஸ் ஆட தெரியாமல் அடித்து ஆட முயற்சிப்பதால் எளிதில் தங்கள் விக்கெட்டை தாரைவார்த்து விடுகின்றனர். அதுவும் ரோகித் சர்மா சுத்தமாக ரன் அடிக்கத் திணறுவது அணிக்கு படுபாதகமாக உள்ளது.
வார்த்தையை விட்ட ஹெட்; பதிலடி கொடுத்த சிராஜ்; பரபரப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட்!
What is the reason for india defeat
இதேபோல் பும்ரா, சிராஜை தவிர மற்றவர்கள் பந்துவீச்சு மெச்சும்படி இல்லை. இந்த டெஸ்டில் ஒரு விக்கெட் கூட எடுக்காத ஹர்சித் ரானா 16 ஓவர்களில் 86 ரன்கள் (ஓவருக்கு 5 ரன்கள்) விட்டுக்கொடுத்தார். இதேபோல் நிதிஷ்குமார் ரெட்டி பந்துவீச்சும் பலனளிக்கவில்லை. ஸ்பின்னுக்கு சாதகமில்லாத இந்த பிட்ச்சில் அஸ்வினின் பந்துவீச்சும் எடுபடவில்லை. ஆகவே இந்தியா அடுத்த டெஸ்ட்டில் 3வது பாஸ்ட் பவுலரை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பீல்டிங்கிலும் இந்தியா சரியாக செயல்படவில்லை. ரிஷப் பண்ட் இரண்டு கேட்ச்களையும், முகமது சிராஜ் ஒரு கேட்ச்சையும் கோட்டை விட்டனர். இதையும் சரி செய்வது அவசியமாகும். 3வது டெஸ்ட் நடக்கும் பிரிஸ்பேன் பவுன்சர் பந்துகளுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் அதற்கு ஏற்ப களமிறங்கினால்தான் வெற்றியை நினைத்துப் பார்க்க முடியும்.