வார்த்தையை விட்ட ஹெட்; பதிலடி கொடுத்த சிராஜ்; பரபரப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட்!
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் முகமது சிராஜ் இடையே வார்த்தை மோதல் உண்டானது.
Travis head Hundred
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2வது பிங் பால் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடந்து வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் டெஸ்டில் சதம் அடித்த ஜெய்வால், விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
India vs australia 2nd test
நிதிஷ் குமார் ரெட்டி (42) சிறப்பாக விளையாடினார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்ச்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் 86 ரன்கள் எடுத்திருந்தது. நாதன் மெக்ஸ்வீனி 38 ரன்களுடன், மார்னஸ் லாபுஸ்சேன் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன. நாதன் மெக்ஸ்வீனி (39 ரன்), ஸ்டார் வீரர் ஸ்டீபன் ஸ்மித் (2) ஆகியோரை பும்ரா வெளியேற்றினார். பின்பு லாபுஸ்சேனுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினார். லாபுஸ்சேனும் சில நல்ல பவுண்டரிகளை விரட்டினார்.
Mohammed siraj Bowling
கிளாசிக் ஷாட்களை ஓடவிட்ட மார்னஸ் லாபுஸ்சேன் தனது 20வது அரை சதத்தை விளாசினார். நன்றாக விளையாடிய அவர் 64 ரன்னில் நிதிஷ்குமார் பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் மறுபக்கம் அஸ்வின் ஓவர்களில் 2 சிக்சர்கள் விளாசி அதிரடியாக ஆடிய ஹெட் 17வது அரை சதம் அடித்தார். இதற்கிடையே மிட்ச்செல் மார்ஷ் 9 ரன்னில் அஸ்வின் பந்தில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் ஆனார். ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் படவில்லை என்பது தெரியவந்தது.
ஆனால் மார்ஷ் பந்து பேட்டில் பட்டு விட்டதாக நினைத்து டிஆர்எஸ் கேட்காமல் நடையை கட்டி விட்டார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் மரண அடி அடித்த டிராவிஸ் ஹெட் 110 பந்தில் தனது 7வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசிய ஹெட் 141 பந்தில் 140 ரன் எடுத்து அவுட் ஆனார். இதில் 17 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும்.
என்ன! முகமது சிராஜ் 181.6 kph வேகத்தில் பந்துவீசினாரா? உண்மை என்ன தெரியுமா?
Jasprit Bumrah Bowling
இதன்பிறகு கம்மின்ஸ் (12), ஸ்டார்க் (18), போலண்ட் (0) என அடுத்தடுத்து அவுட்டானதால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் சிராஜின் ஒரே ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். ஆனால் அதே ஓவரிலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கினார்.
ஹெட் அவுட் ஆன உடன் சிராஜை பார்த்து சில வார்த்தைகளை கூறினார். சிராஜும் பதிலுக்கு கோபமாக அவரை வழியனுப்பி வைத்தார். இதனல் கோபம் அடைந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் சிராஜை கிண்டல் செய்தனர். ஆனால் இதை கவனத்தில் கொள்ள சிராஜ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Pink Ball Test
பின்பு 157 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்தியா 2வது இன்னிங்சை துவங்கியது. ஆனால் தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் 7 ரன் எடுத்த கே.எல்.ராகுல் கம்மின்ஸ் பந்தில் கேரியிடம் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார். அதன்பின்பு ஜெய்ஸ்வாலும் 24 ரன்னில் போலண்ட் பந்தில் கேட்ச் ஆனார்.தற்போதைய நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழந்து 56 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா 100 ரன்களுக்கு மேல் பின்தங்கி இருப்பதால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
தொடர்ந்து சொதப்பும் ரோகித்; கேப்டன்சிக்கும் சிக்கல்! மீண்டும் கேப்டனாவாரா பும்ரா?